வெற்றிலை ,பாக்கு ,பழம் சொல்லும் தத்துவம்*
ஆலய வழிபாடுகள் , கும்பாபிஷேக காலங்களில் இந்தப் பதிவு நல்லது என்று எண்ணுகிறேன்!
பழம் பாக்கு வெற்றிலையுடன் ஆலயம் செல்லுங்கள்!!!
வெற்றிலையும் , பாக்கும் மகாலட்சுமியின் அம்சம் . வெற்றிலையின் நுனியில் லக்ஷ்மியும்,நடுவில் சரஸ்வதியும்,காம்பில் பார்வதி தேவியும் இருக்கிறார்கள் .வெற்றிலை ,பாக்கு ,பழம் வைத்துஇறைவனை வணங்குவது மரபு.
வெற்றிலை,பாக்கு வைத்து வணங்கவில்லையெனில், எந்த ஒரு பூஜையும் நிறைவு பெறாது .
வெற்றிலை ,நோயில்லாமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.பாக்கு செல்வம் கிடைக்க வழிவகுக்கிறது .பாக்கு வைத்து இறைவனை வணங்கினால் நமக்கு குறைவற்ற செல்வம் கிடைக்கும் .வாழைப்பழம் பாவ -புண்ணிய விடுதலையை குறிக்கும் .தேங்காய் அறிவை தரும் .
தேங்காய் ,வெற்றிலை,பாக்கு ,பழம் வைத்து அர்ச்சனை செய்வது நமக்கு அறிவு,ஆரோக்கியம் ,
செல்வம் ,பாவ-புண்ணிய விடுதலை ஆகியவற்றை தர வேண்டும் என்பதால் தான் .கருணை கடலான இறைவனை பூஜிக்கும் போது இவற்றை வைத்து பூஜிக்க வேண்டும் .
திருமணத்திற்கு அழைக்கும் போது வெற்றிலை , பாக்கு, பழத்துடன் அழைக்க வேண்டும் .அதுதான்மரியாதைக்குரிய செயல்
ஆகும்.விருந்தினர்களுக்கு சுப காரியத்தின் போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் ஒரு பொருளோடு வெற்றிலையும்,பாக்கும் சேர்த்து கொடுத்தால் நம் குடும்பம் செழித்தோங்கும் .
மங்கள பொருளான வெற்றிலை,பாக்கை வலது கையால் வாங்க வேண்டும்.
வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது . சீதை ,
“ராமன் போரில் ராவணனை வென்றான்” என்ற செய்தி கூற வந்த அனுமனிடம் ,”வெற்றி உண்டாகட்டும் “என்று வெற்றிலை மரத்தில் வெற்றிலையை பறித்து ஆசீர்வதித்தாள்.ஆகையால் வெற்றிலை மாலை சார்த்தி ,அஞ்சநேயரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் என்ற வழிபாடு ஆரம்பமானது!!!
வெற்றிலையை வாட விடுவது வீட்டிற்கு நல்லதல்ல .வெற்றிலை ஒரு கர்ப்ப மூலிகை .
இதனுடன் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட தேவையான கால்சியம்சத்து கிடைக்கும்.
வெற்றிலை நரை ,மூப்பு ,திரை ,சாக்காடு ஆகியவற்றை நீக்கி ,உடலை என்றும் நோயின்றி
வைத்திருக்க பயன்படுகிறது . புற்று நோயை குணப்படுத்துகிறது. இருமல்,வாயு கோளாறு போக்கவல்லது .தீப்புண்ணை ஆற செய்கிறது . See less
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மிக மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com See less
See less
Comments by Dr. N. Somash Kurukkal