Canada Toronto அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் கருங்கல் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் – 25/05/2026 திங்கட்கிழமை!!!
இறையருள் பெருகும் மஹா கும்பாபிஷேக கிரியா நிகழ்வுகள் ஆரம்பம் – 18/05/2026 திங்கட் கிழமை!
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனர் ( Modern Hindu Culture . Org ) சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார் , இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத் தலைவர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார் அவர்களது சீரிய வழி காட்டலில், அவர்களது தலைமையில் நடைபெறும் Toronto ஸ்ரீ வரசித்தி வரசித்தி விநாயகப் பெருமானின் மஹா கும்பாபிஷேகத்தை, ஆலய முதல்வர் சிவாச்சார்ய குலபூஷணம் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார சிவாச்சார்யார் அவர்கள் பிரதிஷ்டா பிரதான சிவாச்சார்யாராக நடாத்தி வைக்கிறார்!!!
சிவாச்சார்யப் பெருமக்கள், குருமஹா சந்நிதானங்களின் நல்லாசிகளுடனும் ஆன்மீகப் பெரியோர்களின் நல் வாழ்த்துகளுடனும், அடியார்களின் பிரார்த்தனைகளுடனும் நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேகம் சிறப்புற, எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி உடனுறை ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானின் திருவருள் வேண்டி வணங்கி பிரார்த்திக்கிறோம்!
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம், இலங்கை.
பகிவு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

See less