வெண்மை- ஸத்வ குணத்தைக் குறிக்கும். சிவப்பு- ரஜோ குணத்தைக் குறிக்கும். ஸத்வ குணம் அமைதியை அளிக்கும். ரஜோ குணம் செயல்படத் தூண்டும். உலக வாழ்க்கைக்கு இரண்டும் தேவை. மனத் தெளிவு வேண்டும். அதைப் பெற நல்ல செயல்பாடு வேண்டும். கடவுளை மனதில் நிறுத்தியோ, பணிவிடை செய்தோ வழிபடலாம். பிரம்மோத்ஸவம், தேர்த்திருவிழா போன்ற கோலாகலமான வழிபாடுகளும் உண்டு. உணவு- ஊக்கமின்றி பஜனையோடும் வழிபாடு உண்டு. ஏகாதசி போன்ற சிறப்பு நாட்களில் மனதில் தியானம் செய்து வழிபடுவதும் உண்டு.
சத்வ குணம் என்பது தூய்மையான, அமைதியான, நல்ல இயல்புகளைக் குறிக்கும். இது மன அடக்கம், விவேகம், கருணை, அகிம்சை, மகிழ்ச்சி, மனத்திருப்தி, மனத்தூய்மை, மற்றும் பாவச் செயல்களில் கூச்சப்படுதல் போன்ற பண்புகளை உள்ளடக்கியது. முக்குணங்களில் (சத்வ, ரஜோ, தமோ) முதன்மையானதான ரஜோ குணம் என்பது சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடப்படும் மூன்று குணங்களில் ஒன்று. இது வீரம், ஊக்கம், முயற்சி, ஆசை, வேட்கை, இறுமாப்பு, புலனின்பப் பற்று போன்ற செயல்களையும், செல்வத்திற்காகவும் புகழுக்காகவும் பாடுபடும் குணத்தையும் குறிக்கிறது. சாத்வீகம், இராஜசம், தாமசம் ஆகிய முக்குணங்களின் கலவையாலேயே உலகம் உருவானது
இங்கே தாமச குணம் சோம்பலைக் குறிக்கிறது!
உயிரினங்களின் படைப்பு ரஜோ குணத்தின் சேர்க்கையால் நிகழ்கிறது. ஆகையால் செயல்பாட்டுக்கு அடையாளம் சிவப்பு. ஸத்வ குணத்தின் அடையாளம் வெண்மை. போரில் வெள்ளை நிறக் கொடி அசைத்தால், சமாதானமாகப் போக விரும்புகிறார் என்று எடுத்துக் கொள்வார்கள்.
கறுப்பு நிறக் கொடியை, துயரத்துக்கு அடையாளமாகவும் அனுமதி அளிப்பதை பச்சைக் கொடி காட்டினார் என்றும் நிறங்கள் வாயிலாக விளக்கம் அளிப்பது உண்டு.
ஜீவராசிகளைப் படைப்பவரும், காப்பவரும் உள்ளே குடி கொண்டிருக்கிறார் என்பதை, கோயில் சுவர் வர்ணங்கள் (கோடிட்டு) கொடி காட்டுகிறது என்றும் சொல்லலாம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா
இணையதள மின்இதழ் ஆசிரியர்.
Comments by Dr. N. Somash Kurukkal