உள்ளத்தையும், உடலையும் கெடுக்காத பொருள்களைப் பரிந்துரைக்கும் தர்ம சாஸ்திரம்.

மனத் தூய்மை, செயல்பாட்டைச் சிறப்பிக்கும். கண்ணன் கீதையில் சாத்விக உணவைப் பரிந்துரைக்கிறார். அதில் பல உண்டு! அதில் ஒன்று வாழைக்காய். வாழை முழுவதும் பயனளிக்கும். இலை, தண்டு, பூ, காய் அத்தனையும் மருத்துவ குணம் பெற்றவை. சுகாதாரத்துக்கும், தூய்மைக்கும் தேவைப்படுகிறது.

அநேகமான வீடுகளில் வாழை மரம் உண்டு மிக இலகுவாக கிடைக்கும் எங்கும் அலைய வேண்டியதில்லை!

இறந்தோரின் சடங்குகள், சிராத்தம், போன்றவை தங்கு தடையின்றிச் செயல்படுத்த ஆரோக்கியம் தேவை. அதில் பங்கு பெறுபவர்களின் உடல் நலனையும் நாம் கவனிக்க வேண்டும். அப்படியரு தனிச் சிறப்பு வாழைக்காய்க்கு உண்டு!

வாழைக்காய் அபர காரியத்துக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒன்று அல்ல அது. வருஷம் பூராவும் கிடைக்கும் பொருள் அது. வீடுகளில் அவை வளர்க்கப்படுகின்றன. இப்படி சுலபமாகவும், சிறப்பாகவும் இருப்பதால் அன்றாடம் உணவிலும் அதன் சேர்க்கை சிறந்தது.

தர்ம சாஸ்திரம் வாழைக்காயை அபர காரியங்களுக்குப் பரிந்துரைத்தது. ஏன் என்றால் தர்மசாஸ்திரம் கூறும் சாத்வீக உணவுகளில் மிகவும் சுலபமாக வாழைக்காய்யை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுதான் பிரதான காரியம்!

பதினோராவது நாள் செய்யப்படும் ஏகா ஹோமத்தில் வாழைக்காயோடு சேர்ந்த அன்னம் பயன்படுத்தப்படும்.

பல சாத்வீக உணவுப் பொருட்களை தர்மசாஸ்திரம் பரிந்துரைதாலும் , சுலபமாக கிடைக்கும் என்பதானால்தான் இன்று வரை சிராத்தம் போன்ற நிகழ்வுகளில் வாழைக்ககாய் பயன் படுத்துவது நடைமுறையில் உள்ளது நண்பர்களே!!!

தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா
இணையதள மின்இதழ் ஆசிரியர்.