தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
விபூதி தரித்தல், பவித்திரம் – தர்ப்பை அணிவது போன்ற விடயங்கள் கடந்த இரு பகுதிகளில் பார்த்தோம் !!!
இன்று அறிவோம்!!!
ப்ராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு):
யோகமார்க்கத்தில் ஓரம்சம் பிராணாயாமம். யோகம் என்பது உடலையும் மனதையும் நமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தும் மார்க்கம். அதற்குதவும் சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சியே பிராணாயாமம். உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் எமக்கு; அதுவும் இந்த இயந்திரமான இன்றைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் எததனையோ பிரச்சினைகள் இருக்கும். அவை யாவும் நமது மனத்தைக் குடைந்து கொண்டிருக்கும். அலைபாயும் மனத்தினால் நாம் இறைவனை வழிபடுதல் இயலாது.
மனம் இறைவன் மீது லயித்து நமது சிந்தனை ஒருங்கு குவிக்கபடும் போதுதான் பிரார்த்தனைகள் பலனளிக்கும். அதற்கு வழிவகுப்பதே பிராணாயாமம். புறச்சிந்தனைகளை ஒதுக்கி மனத்தை அகவயப்படுத்தி இறைநினைவைக் கிளரவைத்து நாம் இப்போது மற்றெல்லாவற்றையும் மறந்து இக்கிரியைஅயில் ஒன்றுபடப் போகிறோம் என்ற உணர்வோடு இந்த சுவாசப் பயிற்சியில் ஈடுபடுகிறோம். இப்போது சாதாரணமாக நமக்காகக் கிரியைகளைச் செய்யப் போகின்ற அர்ச்ச்கரே பிராணாயாமத்தில் ஈடுபடுவது வழக்கம்.
ஓம்பூ: ஓம் புவ: ஓம் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் சத்யம்.
ஓம் த்த்சவிதுர்வரேண்யம். பர்க்கோ தேவஸ்ய தீமஹீ. தியோ யோ த:: ப்ரசோததயாத்.
ஒமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரம்ம பூர்புவஸ்வரோம்.
சுவாசக் கட்டுப்பாடாகிய பிராணாயாமம் பிரணவ மந்திரமாகிய ஓங்காரத்தில் தொடங்கி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் எனப்படும் ஏழுலகங்களையும் கூறி அதன் பின் காயத்திரி மந்திரத்தைச் சொல்லி நிறைவு பெறுகிறது.
காயத்திரி மந்திரத்தின் பொருள்; எந்த ஒளிக்கடவுள் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ அவரை மனதில் தியானிப்போமாக.
இன்னும் தொடரும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
ப்ராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு): என்ன எவ்வாறு என்பதை அறிவோம்.