தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
கடந்த பதிவில் பூஜை புனஸ்காரங்கள் ஆரம்பத்தில் திருநீறு அணிவதன் முக்கியத்துவத்தை பார்த்தோம்.
இன்று பவித்திரம் எனப்படும் தரப்பை அணிவதன் முக்கியத்துவத்தை பார்ப்போம்!!!
பவித்ரதாரணம் (தர்பை அணிதல்):
விபூதி தரித்து நம்மை ஈடுபடுத்தி, சிவசிந்தனையில் நம்மை ஆயத்தம் செய்து கொண்டோம். இனி அந்தக் காரியத்தில் ஈடுபடுவதற்கு நம்மைத் தயார்செய்ய வேண்டுமல்லவா? அதற்காக, தர்ப்பைப் புல்லினால் ஆன பவித்திரம் என்னும் ஒன்றை நமது மோதிர விரலில் அணிந்து கொள்கின்றோம். தற்னை புனிதமானது. நமது சமயக் கிரியைகள் யாவற்றிலும் அது முக்கிய இடம் பெறுகின்றது.
சூழலில் இருக்கும் மாசுக்களை நீக்கித் தூய்ம செய்வதுடன் மந்திர ஒலிகளைக் கிரகித்துச் சேகரித்துப் படிப்படியாக் வெளிவிடுவதில் வல்லது. ஒரு கும்பத்தை உருவாக்கும்Bஓது கும்பத்தினுள்ளேயும் வெளியேயுமாக இரு கூர்ச்சங்களும் ஒரு பவித்திரமும் தர்ப்பையால் செய்யப்பட்டு அங்கு போடப்படுகின்றன.
தெய்வ சக்தியைக் கும்பத்தில் தேக்கிவைக்க அவை உதவுகின்றன. அதேபோலக் கிரியைகளில் ஈடுபடும் நாம் நமக்கு மனத்தூய்மை, மனத்தெளிவு, மன ஒருமைப்பாடு என்பனவை ஏற்பட்டுக் கிரியைகளில் மனமொன்றி நிற்பதற்காகப் பவித்திரம் அணியப் பெறுகின்றது. அதிக சக்திச் செறிவும் சிறப்பான அதிர்வுகளும் தர்ப்பையில் இருப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
நமது மோதிரவிரல் மிகச் சிறப்பான ஓரிடம். நமது உடலில் சில இடங்கள் நரம்புகளின் சந்திப்புகளாகவும், பல உணர்வுகளைத் தூண்டல் செய்யக்கூடிய இயல்புடையவைகளாகவும் உள்ளன. இந்த இடங்களில் அதற்குரிய ஊசிகளை முறைப்படி ஏற்றுவதன் மூலம் உடல் நோய்களை நீக்கி ஆரோக்கியம் ஏற்படுத்தும் சீன வைத்திய முறைகயாகிய “அக்யூபன்சர்” முறையை இப்போது பலரும் அறிவர். இதனை முன்னரே அறிந்திருந்த நம் முன்னோகள் இத்தகைய இடங்களில் துளையிட்டு தங்கம், வெள்ளி முதலிய உலோகங்களினால் ஆன நகைகளை அணிந்தும், பலன் பெற்று இருக்கின்றனர். செடில் காவடியும், இத்தகைய ஒன்றே. கழுத்திலும், மணிக்கட்டிலும் நகைகளை அணிவதன் மூலம் இத்தகைய நற்பலன்களைப் பெறமுடியும் என்பதை விஞ்ஞான ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
மோதிர விரலின் அடிப்பகுதி இத்தகைய சிறப்புப் பொருந்திய ஒரு இடமாகவும் தர்ப்பை நாம் முன்னரே பார்த்தபடி நல்ல உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் இருப்பதனால் சங்கல்பம் செய்வதன் ஓரங்கமாகப்ப் பவித்திரம் அணிதல் நடைபெறுகின்றது. இந்நேரத்தில் தர்பையினால் ஆன ஆசனத்தில் இருக்கும்படியும் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான வசதி குறைவுகள் காரணமாக பாவனையாக இரு தர்ப்பைகளைக் காலின் கீழ் போட்டுவிட்டு அமரும்படி கேட்கப்பெற்றுகிறார்க. அதேபோலக் கைவிரலில் பவித்திரம் அணிந்தபின் மலர்களுடன் சில ர்கர்ப்பைகளை
உள்ளங்கைகளுக்குள்ளே இட்டுக்கொண்டுதான் சங்கல்பம் ஆரம்பமாகின்றது. தர்ப்பை அணியும் போது சொல்லப் பெறும் மந்திரம்:
“ததேவ லக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ
வித்யாபலம் தைவபலம் ததேவ கஊரீபதே தேங்க்ரீ யுகம் ஸ்மரராமி”
கௌரீ பதியாகிய சிவபிரானே உனது பாதங்களிரண்டையும் நினைக்கின்றேன். அதனால் (இச்செயல் தொடங்கும் இந்த நேரத்திற்குரிய) நாள், லக்னம் என்பன சுலபமானவையாகவும் தாரை, சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலும் சுகம் செய்வனவாகவும் கல்வியறிவினாலும் தெய்வத்தின் துணையினாலும் அவை சிறந்து விளங்குகின்றன.
மேலும் தொடரும்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
பவித்திரம் எனப்படும் தரப்பை அணிவதன் முக்கியத்துவத்தை பார்ப்போம்!!!