எந்தக் கிரியைகளாக இருந்தாலும் அதன் ஆரம்பம் இதுதான் நண்பர்களே!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
எந்தக் கிரியைகளாக இருந்தாலும் அதன் ஆரம்பம் இதுதான் நண்பர்களே!!!
பலரும் அறிந்த விடயங்கள். மேலும் பலர் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்க்கான பதிவு இது!!!
கிரியைகளின் ஆரம்பம்!!!
எந்தக் கிரியையாயினும் ஆரம்பத்தில் பஸ்மதாரணம் (விபூதி தரித்தல்), பவித்திர தாரணம் (தர்ப்பை அணிதல்), பிராணாயாமம், சங்கல்பம், விநாயக வழிபாடு, கலசபூஜை (தீர்த்த பாத்திரத்திற்கு), கண்டாபூஜை (மணிக்கு), தீபபூஜை (திருவிளக்கிற்கு), வருண கும்ப பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை முதலியன வழமையாக இடம்பெறும். இவை பூர்வாங்கக் கிரியைகள் (பூர்வ-ஆரம்ப,தொடக்க) எனக் கூறப் பெறும். பூர்வக்கிரியை வேறு, பூர்வாங்கக் கியை வேறு)
பஸ்மதாரணம்:
விபூதி சிவ சின்னங்களுள் ஒன்று. சைவர்கள் எந்நேரமும் விபூதி அணிந்திருத்தல் அவசியம். “ஆளடையாளத்திற்காகத் திருநீறு இட்டுக்கொள்” என உபநிடதவாக்கியம் கூறுகிறது. நாம் எப்போதும் சிவ சிந்தனையிலிருந்து நீங்காதிருப்தற்கு விபூதி உதவுகின்றது. “வாழ்க்கை நிலையற்றது. நாம் என்றோ ஒரு நாள் சாபராகி விடுவோம்: என்ற எண்ணம் எங்கள் மனத்தில் இருப்பதற்கும் ஒருவகையில் உதவுகின்றது இந்தத் திருநீறு. இந்த எண்ணம் இருக்குமானால் நாம் தீயவற்றை நீக்கி நல்லவற்றைச் செய்ய முயற்சிப்போமல்லவா ?
விபூதி பசுஞ் சாணத்தினை நீறாக்குவதால் பெறப்படுகின்றது. பசு சைவர்களின் போற்றுதலுக்குரியது. எல்லாத் தெய்வாம்சங்களும் பசுவில் இருப்பதால் கோமாதா என்றும், காமதேனு என்றும் போற்றி வணங்குகிறோம். அதன் சாணமே நீறாகி வருவதால் அதற்கு ஒரு தனித் தன்மை உண்டு.
பசுஞ் சாணம் நல்ல ஒரு தொற்று நீக்கி என்றும் அதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்றும் மருத்துவ ரீதியிலும் நிரூபிக்கப் பெற்றுள்ளது.
விபூதியிலும் அத்தகைய சிறப்பம்சங்கள் உண்டு. உடலில் உள்ள தேவையற்ற நீத்தன்மையை உறுஞ்சும் தன்மையும் விபூதிக்குண்டு. இவ்வாறு பல சிறப்பம்சங்கள் உள்ள விபூதியை நாம் ஒரு நற்கருமம் தொடங்குமுன் தரித்துக் கொள்வது அவசியமல்லவா? நெற்றியில் திருநீறு இன்றிச் செய்யும் எக்காரியமும் பலனளிக்காது. அதனால் எந்தக் கிரியையும் ஆரம்பிக்கும் போது விபூதி தரித்தல் அவசியம். அதுவும் மந்திர சகிதமாக தரிக்கும்போது இன்னும் சிறப்பல்லவா? அவ்வேளையில் சொல்லப்பெறும் சுலோகம்:
“ஸ்ரீ கரம் ச பவித்திரம் ச ரோக தோஷ நிவாரணம்
லோக வஸ்யகரம் புண்ணியம் பஸ்மம் த்ரைலோக்ய சாதனம்”
தொடரும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
எந்தக் கிரியைகளாக இருந்தாலும் அதன் ஆரம்பம் இதுதான் நண்பர்களே!!!
Scroll to top