விளக்கை ஊதி அணைக்கக் கூடாது என்கிறார்களே… அதன் தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
விளக்கை ஊதி அணைக்கக் கூடாது என்கிறார்களே… அதன் தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!
பல இடங்களில் பார்த்திருப்பீர்கள் , தீபங்களை கற்பூர ஆராத்திகளை வாயால் ஊதி அணைப்பதை கண்டிருப்பீர்கள் ! அது தவறு.
விளக்கு / தீபம் என்பது நமது பண்பாட்டில் மதிப்புக்கு உரிய ஒரு பொருளாகக் கருதப்படுகிறது. எப்படி பிள்ளையாரை வணங்கிச் செயலைத் தொடர் கிறோமோ, அப்படி தீபமேற்றி விழாவைத் துவக்குவோம். விளக்கொளியை பரம்பொருளாக நினைக்கிறோம்.
‘பரம்பொருளின் வடிவே! உண்மையை விளக்கும் கலங்கரை விளக்கமே! எது ஆன்மா, எது ஆன்மா அல்ல என்பதை நானே அறிந்து கொள்ளும் பகுத்தறிவை வழங்கி, என்னை அறிவாளியாக்கு!’ என்று தர்மசாஸ்திரம் விளக்கின் உயர்வை விளக்கும் (பரமாத்ம தனோ தீப…)
பொழுது புலர்ந்தவுடன் விளக்கொளியில் கண் விழிப்பர் நம் முன்னோர். கோயிலில் விளக்கைப் பார்த்தால், கடவுளைப் பார்த்த மாதிரி. சாமி புறப்பாட்டில் தீபம் முன்னே செல்லும். இரவைப் பகலாக்க விளக்கு உதவுகிறது. அதை வாயால் ஊதி அணைப்பது அபசாரம்.
ஊதும்போது நம்மையும் அறியாமல் எச்சில் திவலைகள் விளக்கில் படுவதைத் தவிர்க்க வேண்டும். நெருப்பில் ஜ்வாலையை வரவழைக்க ஊதுவதுண்டு. அங்கு தர்ம சாஸ்திரம் எச்சரிக்கும். அக்னியை வளர்க்க ஊதுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற இக்கட்டான சூழலில், கையால் மறைத்து ஊதச் சொல்லுகிறது. காற்று கையில் பட்டு நெருப்பில் பட வேண்டும். எச்சில் திவலைகள் கையில் பட்டு விடும். காற்று மட்டும் நெருப்பை நெருங்கும்.
இந்த விளக்கத்தை வைத்துக் கொண்டு, நானும் கையால் மறைத்து விளக்கை அணைக்கிறேன் என்று விதண்டாவாதம் செய்யாதீர்கள்!
சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிந்து செயல்படுங்கள்! வழிபாட்டு முறைமைகளில் விவாதம் வேண்டாம் நண்பர்களே!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
விளக்கை ஊதி அணைக்கக் கூடாது என்கிறார்களே… அதன் தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!
Scroll to top