தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பெண்ணைச் சிறப்பிக்க, ‘நீ மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய்’ என்கிறார்கள். ஆனால், ‘பார்வதிதேவி மாதிரி இருக்கிறாய்!’ என்று எவரும் சொல்வதில்லையே… ஏன்? அறிவோம் தெரிவோம்!!!
குழந்தைகளை, ‘கண்ணா வா… வா!’ என்கிறார்கள். ஏன் ‘ராமா வா…வா!’ என்று அழைப்பதில்லை?
தமிழுக்கு அமுதென்று பெயர் என்கிறார்கள். ஏன் வேறு இனிப்பு வகைகளைக் குறிப் பிடுவதில்லை.
குழந்தைகளை அரவணைக்கும் போது, ‘என் கண்ணு!’ என்பார்கள். ஏன், ‘என் மூக்கு!’ என்பதில்லை? இருக்கைகளில் எத்தனையோ சிறப்பு இருந்தும், ஏன் ‘சிம்மா சனம்’ என்கிறார்கள்? புலியாசனம் என்று ஏன் சொல்வதில்லை?
எல்லா உயிரினங்களுக்கும் சக்தி இருக்கிறது. இருந்தாலும் ‘குதிரை சக்தி’ என்றுதானே கூறுகிறார்கள். யானை சக்தி என்று கூறக் கூடாதா?
எத்தனையோ நடைகள் அழகாகத்தான் இருக்கிறது. ஆனாலும் ‘அன்ன நடை’ என்றே சொல்கிறார்கள். திருடனை இகழ்வாகப் பார்க்கிறோம். ஆனால், கண்ணனை மட்டும் ‘நவநீத சோரா!’ என்று புகழ்ச்சியுடன் பார்க்கிறோம்.
‘என் தங்கம், என் சொக்கத் தங்கம்’ என்று குழந்தையைப் பாராட்டுகிறான். ‘என் வைரம், என் கோமேதகம்’ என்று ஏன் சொல்வதில்லை? வீரசிம்மன், பிரதாபசிம்மன் என்று பெயர் உண்டு. வீரப்புலி, பிரதாபக் கடுவா என்று ஏன் சொல்வதில்லை?
உணவுண்டு பசியாறியவன், உணவளித்தவனின் உணவை, ‘தாங்கள் அளித்த உணவு அமுதமாக இருந்தது!’ என்று போற்றுகிறான். இருவரும் அமுதத்தைச் சுவைத்ததில்லை. இருந்தும் ஏன் அப்படிச் சொல்கிறார்கள். தெரிந்த ஓர் உயர்ந்த சுவையைச் சுட்டிக் காட்டலாமே!
முருகனை அழகன் என்கிறோம். ராமனை வீரன் என்கி றோம். ராமன், அழகன் இல்லையா, முருகன் வீரன் இல்லையா? ஏன் இந்தப் பாகுபாடு? ‘நீங்கள் பாட ஆரம்பித்ததும் கச்சேரி, களைகட்டியது!’ என்று சொல்வதுண்டு. வீட்டுக்குள் நுழைந் தவுடன் மன நிறைவு அனுபவத்தில் தோன்றுகிறது. வீடு லட்சுமிகரமாக இருக்கிறது என்கிறோம். சில வீடு, களை இழந்து காணப்படுகிறது.
பால் வடியும் முகம் பிரகாசமாக இருக்கிறது. அவள் முகத்தில் அழகு மிளிர்கிறது. இப்படியெல்லாம் நாம் சொல்வதுண்டு. ‘களை’ என்ற சொல், லட்சுமியைக் குறிக்கும். களையோடு தென்படும் பொருளில் லட்சுமி வாசம் செய்கிறாள்.
நெல் கதிரில் தான்ய லட்சுமி, செல்வத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, வீரத்தில் வீர லட்சுமி, வாளில் கடக லட்சுமி, யானையில் கஜ லட்சுமி- இப்படி எல்லாவற்றிலும் அதன் திறமை தென்படும். மகாலட்சுமி உன்னிடத்திலும் உறைந்திருக்கிறாள் என்ற அர்த்தத்தில் அழகான பெண்ணை மகாலட்சுமிக்கு ஒப்பிட்டுக் கூறுவது மரபு. அதற்கு அழகு மட்டும் காரணமல்ல.
பார்வதியும் அழகானவள்தான். பிரம்மச் சாரியான பிள்ளையாரிடம் கல்யாணம் செய்ய வற்புறுத்தினர். ‘அன்னையின் அழகுக்கு ஈடான ஒரு பெண் எனக்குக் கிடைத்தால், நான் திருமணத்துக்குத் தயார்!’ என்றார் அவர். அன்னைக்கு ஈடான அழகுடைய பெண், இன்னோர் உலகத்தில் இல்லை. ஆகையால் பிள்ளையார் பிரம்மச்சாரியாகவே காலம் தள்ளுகிறார் என்று சுவையான ஒரு கதை உண்டு.
‘சௌந்தர்யலஹரி’ என்ற தலைப்பில் அன்னையின் அழகை வர்ணிக்கிறார் ஆதிசங்கரர்.
‘ஈடு இணையற்ற அழகின் பிரவாகம் பார்வதியிடம் மட்டும்தான் தென்படுகிறது!’ என்பது சங்கரரது கணிப்பு.
விளக்க முடியாத ஏதோ ஒரு சிறப்பு, யாராலும் அறிய முடியாத ஓர் அழகு , மகாலட்சுமியிடம் இருப்பதால் பெண்களை மகா லட்சுமியாகப் பார்க்கிறார்கள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
பெண்ணைச் சிறப்பிக்க, ‘நீ மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய்’ என்கிறார்கள். ஆனால், ‘பார்வதிதேவி மாதிரி இருக்கிறாய்!’ என்று எவரும் சொல்வதில்லையே… ஏன்? அறிவோம் தெரிவோம்!!!