தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
வீட்டில் கண்ணாடி போட்டு, வழிபடப்பட்ட கடவுள் படங்களைத் திடீரென்று கோயில் வாசலில், கோயில் உட்பிராகாரச் சுவர் ஓரமாகவும், அரச மரத்தடி விநாயகரைச் சுற்றியும் கொண்டு வந்து வைக்கிறார்களே! ஆராதித்த படங்களை இப்படி வைப்பது பற்றி அறிவோம்!!!
ஆலயங்களில் மூலவர் என்றும், உற்சவர் என்றும், கடவுளின் இரண்டு உருவங்கள் இருக்கும். மூலவரை நகர்த்தக் கூடாது. அதை ‘அசரம்’ என்று ஆகமம் குறிப்பிடும். உற்சவர் நகரக் கூடியவர். அதற்கு ‘சரம்’ என்று பெயர். சாமி படங்களை எங்கும் எடுத்துச் செல்லலாம். ஓர் இடத்தில் வைக்கவும் செய்யலாம். வீட்டில் நமது சௌகரியப்படி வழிபட சித்திரமாக கடவுள் உருவத்தை வரைந்திருக்கிறோம்.
கடுதாசியில் தென்படும் உருவம். கடுதாசி அழியக் கூடியது. அதோடு சித்திரமும் அழிந்து விடும். அது தெரிந்துதான் கண்ணாடி சட்டத்துக்குள் வைக்கிறோம். கண்ணாடியில் சந்தனம்- குங்குமம் வைக்கிறோம். அதன் உருவத்தில் வைப்பதில்லை. எதிரில் படம் வாயிலாக உருவத்தைப் பார்த்து, அதன் வாயிலாக அருவமான கடவுளை மனதில் வர வழைக்க உதவுகிறது படம். படம் களையிழந்தால், பழுது ஆனால் அதை மாற்றலாம். சிலையில் நிலைத்திருக்கும் சாந்நித்யம் அங்கு இருக்காது. எனவே, படங்களைக் களைவதில் தவறில்லை.
ஆனால் அவற்றை கோயில் பிராகாரங்களிலும், அரச மரத்தடியிலும், விநாயகரைச் சுற்றிலும் வைப்பது தவறுதான். கண்ணா டியை வைத்துக் கொண்டு படங்களை மட்டும் ஆறு கள், குளம் குட்டைகளில் சேர்ப்பது நல்லது. குப்பைத் தொட்டியில் போடாமல் பரிசுத்தமான இடத்தில் வைத்தது அவர்களின் நல்ல எண்ணமாக இருக்கலாம்.
பழைய தெய்வப் படங்களை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாததால், இப்படி பொது இடத்தில்- அதுவும் பல பேர் வந்து போகும் இடத்தில் வைத்து விடுகிறார்கள். தேவைப்படுபவர்கள் எடுத்துச் செல்லத் தோதாக வைத்திருப்பது நல்லது. படம் வாங்க வசதி இல்லாதவர்கள், அதைப் பயன்படுத்த இயலும். அப்படியும் ஒரு நல்லெண்ணம் அதற்கு உண்டு. என்ன இருந்தாலும் பொது இடத்தில் அலட்சியமாகப் போடுவது சரியல்ல.
அதைத் தவிர்க்க வேண்டும். அந்த இடங்களைப் படங்களால் நிரப்பி வழிபடுபவர்களுக்கு இடையூறு விளைவிப்பது தவறு. புதுப் புது படங்களின் வரவு, பழைய படங்களை அகற்றக் காரணமாகிறது. இட நெருக்கடியும், படத்தைக் களையக் காரணமாகும். ஒரு படத்தை பூஜையறையில் வைத்து, மற்ற புது வரவுகளை சுவரில் மாட்டுவது நல்லது. கிராமங்களில் இருக்கும் வீடுகளில் சுவரில் மாட்டி வைத்திருப்பார்கள். புது வரவுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
நமது முன்னோர்களை மனதில் இருத்தி வழிபட்ட காலம் உண்டு. தற்போது அவர்களது வரை படங் கள் பூஜை அறையை அலங்கரிக்கின்றன. மனதில் இருக்க வேண்டிய முன்னோரைப் படத்தில் வைத்து மனதிலிருந்து அகற்றி விட்டது விஞ்ஞானம். மெய்ஞ்ஞானத்துக்கு ஊக்கமளிக்கும் விஞ்ஞானத்தை ஏற்றுக் கொள்ளலாம். அறுவடையானதும் நெல்லை எடுத்துக் கொண்டு வைக்கோலைக் களைந்து விடுவோம்.
தகவலை வாங்கிக் கொண்டு புத்தகத்தை மறந்து விடுவோம். கட்டடம் கட்டி முடித்ததும் சாரத்தை அகற்றி விடுவோம். அது போல் கட வுளின் உருவத்தை படத்தில் பார்த்து மனதில் வாங்கிக் கொண்டு வழிபட வேண்டும். பல அலுவல் களில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனிதனுக்கு மனதில் கடவுளை நிரந்தரமாக வைக்க இயலாத தால், பூஜையறையிலாவது நிரந்தரமாக அது இருக்கட்டுமே என்ற எண்ணம்தான் படத்தை அங்கு வைக்கும் நோக்கம். நிச்சயமாக பூஜை அறையில் படம் வேண்டும்.
அதற்கும் ஓர் எல்லை வேண் டும். பூஜையில் சாமி படங்களை நிரப்பி, மின் விளக்குகளாலும், மாலைகளாலும் அலங்கரிப்பது அவசியம். ஆனால், அதுவே வழிபாடு ஆகாது. அதன் முன் இருந்து மனதில் அவரை நினைத்து தியானம்- ஜபம்- அபிஷேகம்- அர்ச்சனை- தீபாரா தனை ஆகியவற்றை அளித்து வணங்க வேண்டும். அந்த எண்ணத்தை கடவுளது அலங்காரம் தூண்டி விடும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
வீட்டில் வைத்திருக்கும் சாமிப் படங்களை எறியலாமா ???