தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பூஜை வேளையிலும் சரி, லலிதா சஹஸ்ரநாமம் போன்ற நீண்ட அர்ச்சனைகள் செய்யும்போதும் சரி , பாதியிலேயே பூக்கள் தீர்ந்து போனால், அர்ச்சனை செய்யப்பட்ட பூக்களையே திரும்ப எடுத்துப் போடாமல் தேவையான, வேண்டிய பூக்களை உங்கள் தட்டில் எடுத்து வைத்திருங்கள்!!!
நெருப்புக் குச்சியை ஒரு முறை பயன்படுத்திய பிறகு மீண்டும் பயன்படுத்த இயலாது. ஓர் இலையில் உணவு படைத்துச் சாப்பிட்ட பிறகு, அந்த இலையை மீண்டும் பயன்படுத்த மாட்டோம். பாட்டரி தீர்ந்து விட்டால், அதை மீண்டும் பயன்படுத்த இயலாது.
நெருப்புக் குச்சியோ, வாழை இலையோ, பாட்டரியோ… தேவைப்படும் நேரத்தில் இல்லையென்றால் தர்ம சங்கடம். எனவே, இந்த மூன்றையும் முன்னெச்சரிக்கையாக சேமித்து வைப்போம். இந்த முன்னெச்சரிக்கை உணர்வு எந்த அர்ச்சனை பண்ணுவதாக இருந்தாலும், சகஸ்ரநாம அர்ச்சனைகள் உட்பட அனைத்து பூஜை வழிபாடுகளிலும் இருக்க வேண்டும்.
இறை பணியில் அக்கறை தேவை. அர்ச்சனைக்குத் தேவையான பூக்களை முன்னமே சேமித்து வைக்க வேண்டும். பாவித்த பூக்கள் நிர்மாலியம், பயன்படுத்த வேண்டாம்!! இல்லையெனில், நீங்கள் செய்யும் அர்ச்சனையில் உங்களுக்கு அக்கறை இல்லை அல்லது உங்களுக்குப் பிடிப் பில்லை என்றே அர்த்தம்!
ஒரு முறை அர்ச்சனை செய்த பூ, நிர்மால்யம் ஆன பிறகு… மீண்டும் பயன்படுத்தப்படும் தகுதியை இழந்து விடுகிறது. எனவே, ‘போதவில்லை’ என்று காரணம் காட்டி, அர்ச்சனை செய்த பூக்களை திரும்பவும் எடுத்து, ஒப்புக்கு அர்ச்சனை செய்வது தவறு.
தேவையான அளவுக்கு பூக்கள் வாங்க பொருளாதாரம் இடம் தரா விட்டால், தாங்கள் அர்ச்சனை செய்ய வேண்டிய தேவையே இல்லை; அம்பாளின் பெயரைச் சொன்னாலே போதும். அவளது அருள் கிடைக்கும். தவிர, பூக்கள் பற்றாக்குறை வரும்போது அட்சதை, குங்குமம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் பூக்கள் பற்றாக்குறை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் நண்பர்களே!!!
எதுவும் இல்லாத நிலையில் அல்லது பற்றாக்குறை ஏற்பட்டால் பெயரைச் சொல்லி வழிபட்டாலே போதும்.
தவறை தவிர்த்து விடுங்கள். உணவு தயாரிக்கும்போது, பற்றாக்குறைக்கு இடம் அளிப்போமா? இல்லையே!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com


பூஜை வேளையிலும் சரி, லலிதா சஹஸ்ரநாமம் போன்ற நீண்ட அர்ச்சனைகளின் போது , வேண்டிய பூக்களை தட்டில் எடுத்து வைத்திருங்கள்!