தெரிந்து கொள்வோம் நண்பர்களே
ஆலய விக்கிரகங்களும் வஸ்திரமும்!!!
நண்பர்கள் சிலர் கேட்டிருந்தார்கள் , சில கோயில்களில், அம்பாள் விக்கிரகத்துக்கு வஸ்திரம் ஏதும் சார்த்தாமல் அபிஷேகம் செய்தார் அர்ச்சகர். இதுகுறித்துக் கேட்டால், ‘விக்கிரகத்திலேயே வஸ்திரம் செதுக்கியுள்ளனர். தனியே வஸ்திரம் அணிவிக்கத் தேவையில்லை’ என்றார். இது சரிதானா? என்று !
இல்லை! அபிஷேகங்கள் நடைபெறும்போது விக்கிரகங்களுக்கு வஸ்திரம் ஒன்று அணிந்துதான் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்!
யானை பொம்மையைப் பார்க்கும் சிறுவனுக்கு அதில் யானைதான் தெரியும்; அது எந்த மரத்தால் செய்யப்பட்டது என்றெல்லாம் தெரியாது. அவனும் அது பற்றி எண்ண மாட்டான்! தச்சனுக்கு மரம் தெரியும்; யானை தெரியாது. கடவுளைப் பார்க்கும் அர்ச்சகருக்கு, சிலையின் வடிவமைப்பு தென்படாது. கடவுள் மட்டும்தான் தெரியும் , தெரிய வேண்டும்!!! சிலையின் வடிவத்தை உற்றுப் பார்த்தால், கடவுள் தெரியமாட்டார்.
விக்கிரகத்துக்கு வஸ்திரம் வேண்டும், வேண்டாம் எனும் சிந்தனை வந்தாலே, அங்கே கடவுள் பற்றிய எண்ணமும் மறைந்துவிடுகிறது. வஸ்திரம் இல்லாமல் அபிஷேகிக்கலாம், தப்பே இல்லை. விக்கிரகத்தைக் கடவுளாகப் பார்த்த பிறகு, வேறு எந்த எண்ணமும் தோன்றாது!
ஆனால், பக்குவம் அடையாத பாமரர்கள், நல்ல சிந்தனை இல்லாதவர்கள், குரோத மனம் கொண்டவர்கள் , வக்கிர புத்தி உள்ளவர்கள் ஆலயத்துக்கு வருவார்கள், அவர்களின் சிந்தனை ஓட்டம் ஒருவருக்கும் லேசில் புரியாது, அபிஷேகத்தைக் காண நேரிடும்போது, அவர்களின் சிந்தனை தடுமாறவும் வாய்ப்புண்டு!!
ஆனபடியினால் நண்பர்களே அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெறும் நேரங்களில் விக்கிரகத்தில் மறைக்கவேண்டிய இடத்தை மறைப்பது நல்லதுதான்! என்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர்.

ஆலய விக்கிரகங்களும் வஸ்திரமும்!!!