தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
” நாந்தி சோபனம் ” பற்றிய சிறு குறிப்பு!!!
திருமணம், உபநயனம் போன்ற சுபநிகழ்ச்சியின் போது, மறைந்த முன்னோர்களில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காக நடத்தப்படுவது “நாந்தி சோபனம் .’. அதாவது தந்தை, தந்தையின் தந்தை, அவரின் தந்தை, இந்த மூவரின் மனைவிகள், தாய் வழியிலும் இதே வகையில் மூவரும், அவர்களின் மனைவிகளுமாக உள்ள முன்னோர்களை “சோபன பித்ருகள்’ என்று குறிப்பிடுவர். இவர்களின் ஆசியால் குடும்பத்தில் மங்களமும், சந்தோஷமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
திருமணம், உபநயனம் போன்ற சுபநிகழ்ச்சி நம் வீட்டில் நடத்தும் சமயத்தில், பிதுர்லோகத்தில் இருந்து ஆசியளிப்பதற்காக இவர்கள் வீடு தேடி வருகிறார்கள். அவர்களுக்கு உடை, உணவுஅளித்து வழிபடும் செய்யும் சடங்கே “நாந்தி சோபனம் ‘ என்கிறோம்!!!
பூணூல் கல்யாணம், விவாகம் நடக்கும் முன்பு நாந்தி சோபனம் பண்ணுகிறோம். அதை, இதுபோன்ற விசேஷ நாட்கள் தவிர சாதாரண நாட்களில் செய்யலாமா? என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார்! அப்படி செய்ய முடியாது, அப்படி செய்வதுமில்லை!!!
நாந்தி சோபனம் என்பது பூணூல் கல்யாணம் , விவாகம் போன்றவற்றிற்கு ஓர் அங்கம். அது ஒரு விசேஷ
கல்யாணத்துடன் ஒட்டி வரும். கல்யாணத்தின் நிறைவை பதிவு செய்ய அது உதவும். நாந்தி சோபனம் தனியாக வராது.
ஷோடச கர்மாக்களுக்கும் ப்ராயச்சித்த கர்மாக்களுக்கும் அங்கமாக நாந்தி சோபனம் செயல்பட்டு, அதன் நிறைவுக்கு உதவும். உத்ஸவ காலங்களில் ஸ்வாமி வலம் வருவதுண்டு. நாம் நினைத்தபோது எல்லாம் ஸ்வாமி உலாவை நிகழ்த்த முடியாது. விசேஷ நாட்களில் பஞ்சபக்ஷ பரமான்னத்துடன் சமாராதனை இருக்கும். தினமும் சமாராதனை இருக்காது. கல்யாணத்துக்கு அங்கமாக நாகஸ்வர இசை இருக்கும். ஒரு செயலை நிறைவு செய்யும் நிகழ்வுகளை, அந்த செயலை ஒட்டி நடைமுறைப்படுத்துவது சிறப்பு. நாம் எண்ணிய போதெல்லாம் செயல்படுத்த முடியாது நண்பர்களே!!!
சாதாரண நாட்களில், குறிக்கோள் இல்லாமல் நமது விருப்பத்துக்கு நாந்தி சோபனத்தை நடைமுறைப்படுத்த இயலாது. சட்டதிட்டம் , ஒரு விடயத்தை எப்ப செய்ய வேண்டும் என்று ஒன்று இருந்தால் மட்டுமே அதன் சிறப்பு நிலைத்திருக்கும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா. இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

” நாந்தி சோபனம் ” பற்றிய சிறு குறிப்பு!!!