அறிவோம் தெரிவோம்! ஓர் கண்ணோட்டம்!!! ””வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.””

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
அறிவோம் தெரிவோம்! ஓர் கண்ணோட்டம்!!!
””வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.””
அபிஷேகம் என்றால் ஆண்டவனுக்குத்தானே! அப்ப எப்படி மனிதனுக்கு சதாபிஷேகம் கனகாபிஷேகம் என்றெல்லாம் மனிதருக்கும் அபிஷேகம் என்று எப்படி சொல்கிறோம்? பார்ப்போம்!!!
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பது ஒளவையின் வாக்கு. பிறவிகளிலேயே உயரிய பிறவி மனிதப் பிறவிதான். எனவேதான், பலரும் தங்கள் பிறந்தநாளை இயன்ற அளவு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
குறிப்பாக, 60-வது வருடம் முடிந்ததும் சஷ்டியப்த பூர்த்தி என்றும், 70-வது வயதில் பீமரத சாந்தி என்றும், 80-வது வயது நிறைவு பெற்றதும் சதாபிஷேகமும், 90 வயதை நிறைவு செய்தவருக்குக் கனகாபிஷேகமும், நூறை எட்டிய நிலையில் பூர்ணாபிஷேகமும் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக, இறைவனுக்குச் செய்யப்படும் புனித நீராட்டு தான் அபிஷேகம் எனப்படும். ஆனால், 80 வயதைக் கடந்த நிலையில் மனிதர்களுக்குச் செய்யப்படும் புனித நீராட்டும் அபிஷேகம் என்று போற்றப் படுவது எப்படி??? அறிவோம்!
அதாவது, மனிதராகப் பிறந்தவர் தனக்கான சுயதர்மங்களைத் தவறாமல் செய்து, சாஸ்திரங்கள் கூறும் நெறிமுறைகளின்படி வாழ்ந்தால், தெய்வத்துக்குச் சமமாகக் கருதப்படுவர் என்கிறார். எனவேதான், 80 வயதைக் கடந்து, கிரகஸ்தாசிரமத்தில் தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றிய ஒருவருக்கு, அவருடைய சந்ததியினர் சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் என்று கொண்டாடுகிறார்கள்.!
நான்கு ஆசிரம தர்மங்களில் உயர்வானது கிரகஸ்தாசிரமம் தான். இல்லற தர்மத்தை ஏற்றவன்தான் மற்ற மூன்று பிரிவினருக்கும் ஆதாரமாகத் திகழ்கிறான். அப்படி, தன்னை இல்லறத்தில் ஈடுபடுத்திக்கொண்டு, தர்மங்களைத் தவறாமல் அனுஷ்டித்து நிறைவாழ்வு வாழ்ந்துவரும் ஒருவருக்குக் கனகாபிஷேகம் நடைபெறும்போது, தேவர்கள் அனைவரும் அங்கே மறைமுகமாகத் தோன்றி, அவரைப் பூரணமாக ஆசீர்வதிப்பதோடு, அவர் மேலும் நூறு வருடம் வாழ்ந்திட அனுக்கிரகம் செய்வார்கள்” என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன!
அந்த தெய்வானுக்கிரகம் கனகாபிஷேகம் காணும் தம்பதிக்கு மட்டுமல்ல; அவர்களின் ஆசீர்வாதம் மூலம் நமக்கும் கிடைக்கும் என்பதுதான், இந்த வைபவத்தின் சிறப்பம்சமும்கூட!
நன்றி: ப்ரம்மஸ்ரீ சேஷாத்திரிநாத சாஸ்திரிகள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be a graphic of text
அறிவோம் தெரிவோம்! ஓர் கண்ணோட்டம்!!! ””வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.””
Scroll to top