அறிந்து கொள்வோம் நண்பர்களே!
தீபாவளியும் நரகாசுரனும் ஓர் விளக்கம்!!!
முன்பு பண்டிகைகளை வழிபாடுகளை சிறப்பாக செய்தார்கள், கொண்டாடினார்கள், வழிபட்டார்கள்!
தற்காலத்தில் இந்த சமூக வலைத்தளங்கள் தலையெடுத்த பின்னர் எல்லோரும் எல்லாம் தெரிந்தவர்கள் போல எழுத்தத் தொடங்கி விட்டார்கள்.
நரகாசுரன் வதைக்கப்பட்ட திருநாளையே தீபாவளியாகக் கொண்டாடு கிறோம். ஓர் உயிரின் அழிவில் கொண்டாட்டம் உருவாகுமா? இது அண்மைக்காலங்களில் ஒரு சில மேதாவிகளினால் எழுப்பபடும் அர்த்தமற்ற கேள்வி! நாம் விளக்கத்தைப் பார்ப்போம்!
நரகாசுரனுக்கும் தீபாவளிக்கும் சம்பந்தமே இல்லை. தீபாவளிக்கு தர்ம சாஸ்திரத்தின் விளக்கம் என்ன தெரியுமா? நரக சதுர்த்தசி. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்னால் இருக்கக் கூடிய சதுர்த்தசி திதி அன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அத்தனை பேரும் நரகத்துக்குச் செல்வதிலிருந்து விடுபட்டு மோட்சம் போவார்கள்.
சகிக்க முடியாத துயரம்தான் நரகம். அங்கே போகாமல் இருக்க வேண்டுமா… நரக சதுர்த்தசி அன்று உஷத் காலத்தில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளி’ என்பது தர்மசாஸ்திரத்தில் இருக்கும் குறிப்பு. அதிகாலை வேளையில் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்யக் கூடாது என்பது நியதி. இந்த தினத்தில் மட்டும் அதைச் செய் என்கிறார்கள். ‘என்ன மாற்றிச் சொல்கிறீர்களே?’ என்ற கேள்வி வரும். அப்போதுதான், இந்த நாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் சிறப்பு தெரியவரும்.
தைலே லக்ஷ்மீ ஜலே கங்கா. எண்ணெயில் லட்சுமி உட்கார்ந்தி ருக்கிறாள். நீரில் கங்கை இருக்கிறாள். கங்கையில் எல்லா பாவமும் போகும். லட்சுமி இருந்தால் ஐஸ்வரியம் இருக்கும். அங்கே நரக வேதனை மறையுமே… அதனால் எண்ணெய் தேய்த்துக் குளி.’ இப்படிப்பட்டதுதான் தர்ம சாஸ்திரத்தின் குறிப்பு. இதில் ஒரு பிடிப்பு ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட இந்த நரக சதுர்த்தசி நாளிலேயே நரகாசுரன் வதம் செய்யப் பட்டதாக புராணம் பின்னாளில் கூறியது. அவன் செத்துப் போய் விட்டதற்காகக் கொண்டாடுகிறோம் என்று நினைப்பது தவறு. ஒருத்தர் செத்துப் போனதைக் கொண்டாடுவதாக சநாதன தர்மத்தில் எங்கேயுமே வராது.
ஆகவே நண்பர்களே, சிலரின் விஷமத்தமான பேச்சுக்களின்படி, நரகாசுரனுக்கும் தீபாவளிக்கும் சம்பந்தம் இல்லை! நரக சதுர்தசியில் நீராட வேண்டும் என்றுதான் தர்ம சாஸ்த்ரம் சொல்கிறது!!!
நன்றி: ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
தீபாவளியும் நரகாசுரனும் ஓர் விளக்கம்!!! இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை!