தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
திருமணமும் அதன் தத்துவமும்!!!
பொருத்தம் பார்ப்பது என்று நாம் குறிப்பிடுவது ஜோதிடத்தில் ஆனுகூல்யம் எனப்படுகிறது. அதை, ஆங்கிலத்தில் ‘சப்போர்ட்’ என்பார்கள். இந்த சப்போர்ட்டே எல்லாவற்றையும் சாதித்துக் கொடுத்துவிடாது. ஒருவனுக்கு முழுத் தகுதி இருந்தால் மட்டுமே சிபாரிசுக் கடிதத்தின் மூலம் வேலை கிடைக்கும். மற்றபடி, சிபாரிசுக் கடிதமே தகுதியைக் கொடுத்துவிடாது. எனவே, உங்களிடம் இருக்கவேண்டிய தகுதிகள் இருக்கின்றனவா என்று, ஜோதிடர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதற்கு சப்போர்ட்தான் இந்தப் பொருத்தங்கள்.
தாய்-தந்தை வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, செயல்பாடுகள், எண்ணம், கலாசாரம் எல்லாமே வேறு வேறு! இத்தனை வேறுபாடுகளோடு கூடிய ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்து கொள்வது என்று வருகிறபோது, அது சரியானபடி வருமா?
இத்தனை வேறுபாடுகளையும் மீறி தம்பதியின் வாழ்க்கை கடைசி வரை முழு அமைதியோடு அமையுமா? இதையெல்லாம் அளக்க இன்று வரை விஞ்ஞானத்தில் எந்த ஒரு கருவியும் கிடையாது. அதனால் நீங்கள் நம்மூர் சிந்தனைக்குத்தான் வரவேண்டும். அதற்குத்தான் ஜாதகம் அதற்குப் பயன்படும்.
வாழ்க்கையில் அனைவருக்கும் தேவை மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியைக் கொடுப்பது மனம். அந்த மனம் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்கிற மாதிரி இருக்கிறதா? ஓர் இடையூறு வரும் சந்தர்ப்பத்தில் நீக்குப் போக்காகச் செயல்படும் நடைமுறை இருவர் மனதிலும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்!
மனம்தான் இரண்டு. ஆனால், செயல்பாடு ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி அமைந்தால்தான் வாழ்க்கையில் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் நன்மைகளை எட்ட முடியும். இந்த மாதிரி இருக்கிறதா என்று சொல்வதற்குத்தான் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். அது உங்களுக்கு வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானித்துக் கொள்வது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம். யாரும் கட்டாயப்படுத்த முடியாது!!!
ஏக நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம். தம்பதியின் ஒற்றுமைக்கும் நட்சத்திரத்துக்கும் சம்பந்தமில்லை. ஒற்றுமை என்பது மனம் சார்ந்த விஷயம். பண்டைய அரச பரம்பரை சுயம்வரங்களில் இணைந்த தம்பதியர் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அவர்கள் நட்சத்திரத்தை கவனிக்க வில்லை. ராமன்- சீதை, கிருஷ்ணன்- ருக்மிணி ஆகியோர் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். அவர்கள் நட்சத்திரம் பார்த்து இணைந்தார்கள் என்ற தகவல் இல்லை.
நன்றி: ப்ரம்மஸ்ரீ சேஷாத்திரிநாத சாஸ்திரிகள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
திருமணமும் அதன் தத்துவமும்!!!