பவித்திரம் (தர்ப்பை ) அணிவது ஏன்??

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
பவித்திரம் (தர்ப்பை ) அணிவது ஏன்??
இது வலது கை மோதிர விரலில் அணியப்படுவது ஏனெனில் உடலில் இருக்கின்ற நரம்புகள் அனைத்தின்னுடைய தொடர்பும் இவ் விரலில் பிரம்ம முடிச்சாக சேர்ந்திருப்பதால் இதில் தருப்பை இடுகின்ற பொருட்டு உடலில் முழுப்பகுதியும் சுத்தமாக்கப்படுகின்றது. சகல பகுதிகளிலும் இனணந்து பலன் ஏற்படுகின்றது.
தர்மசாஸ்திரத்தைச் செயல்படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்) அணிய வேண்டும். ‘பவித்ரம்’ என்றால் தூய்மை! இயல் பாகவே தர்ப்பை தூய்மையானது. ஆகவே, பவித்ரம் என்பதே தர்ப்பையின் பெயராக விளங்குகிறது என்கிறது வேதம்.
பம் மற்றும் தானம் செய்யும்போது தர்ப்ப பாணியாக இருக்க வேண்டும். தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ, அதே போல் தர்ப்பை அணிந்திருப்பவனிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்மசாஸ்திரம் (விப்யதெ நஸபாபேன பத்ம பத்ர மிவாம்பஸா). ஜபம் மற்றும் வேள்வியைச் செய்யவிடாமல் தடுக்கும் கண்ணுக்குப் புலப்படாத அரக்கர்கள், நம் கையில் உள்ள தர்ப்பையைப் பார்த்ததும் விலகி ஓடுவர். முன்னோர் ஆராதனையில்… அரக்கர்களை விரட்ட, விருந்து படைக்கும் இடத்தை தர்ப்பை யால் துடைப்பது உண்டு.
சங்கரனுக்கு சூலம், விஷ்ணுவுக்கு சக்கரம்… இதுபோல், சாஸ்திரம் பரிந்துரைக்கும் கடமைகளில் ஈடுபடுபவனுக்கான ஆயுதம் பவித்ரம்.
பூதம், பிசாசு, ப்ரம்மரஷஸ் ஆகியவை விரலில் தர்ப்பையைப் பார்த்ததும் மிரண்டு ஓடிவிடுமாம்! ஆகவே, தூய்மை வேண்டியும் இடையூறுகளை அகற்றவும் தர்ப்பை அணிய வேண்டும். தர்ப்பை அணியும் விரலை, ‘பவித்ர விரல்’ என்கிறோம்.
மியின் ஆகர்ஷண சக்தியைத் தடுக்க தர்ப்பையால் ஆன ஆசனத்தில் அமருவது உண்டு. ஆகாயத்தில் இருக்கும் இடையூறைத் தடுக்க விரலில் தர்ப்பை வேண்டும் (தர்பேசுஆசுன). கடமையைச் செய்வதற்கான பொருட்களைத் தூய்மைப்படுத்தவும் தர்ப்பையைப் பயன் படுத்துவர். அக்னி பரிசுத்தமானது என்றாலும் அதன் தூய்மையை வலுப்படுத்த தர்ப்பை உதவும்.
தேவதைகளின் இருக்கையான கும்பத்தில் கூர்ச்சம் இருக்கும். பித்ருக்களுக்கு அளிக்கும் அர்க்யமும் கூர்ச்சத்துடன் இணைந்திருக்கும். தர்ப்பையுடன் சேரும்போது பொருளின் தூய்மை மேம்படும். மின்சாரம் பாயாத பொருட்களில் தர்ப்பையும் ஒன்று. ஆனால், மின்சாரத்தைவிட பலமடங்கு செயல்திறன் கொண்டது தர்ப்பை.
ஸ்ரீராமன் வீசிய தர்ப்பை, காகாசுரனை ஓட ஓட விரட்டிய கதை நாம் அறிந்ததே! ‘தர்ப்பையில் சிந்திய நெய்யை நக்கியது பாம்பு. அதன் நாவை இரண்டாகப் பிளந்து தண்டனை அளித்தது தர்ப்பை…’ என்கிறது புராணம். ‘தர்ப்பை வளர்ந்த இடத்தில் நல்ல நீர் கிடைக்கும்; கிணறு தோண்ட தகுந்த இடமாக அமையும்’ என்கிறார் வராஹ மிஹிரர். மொத்தத்தில் தர்ப்பை இயற்கையின் அன்பளிப்பு! அதன் பெருமையை அறிய தர்மசாஸ்திர நூல்களைப் படியுங்கள்; அசந்துபோவீர்கள்!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணைய தள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
பவித்திரம் (தர்ப்பை ) அணிவது ஏன்??
Scroll to top