தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
கணவரை இழந்த பெண்ணாக இருந்தால் என்ன மனைவியை இழந்த ஆணாக இருந்தால் தத்தமது ஆயுள் விருத்தி ஆரோக்கிய வழிபாடுகளை செய்வதில் எந்த வேறுபாடும் இருக்க வேண்டியதில்லை நண்பர்களே!!!
அறுபது வயது நிரம்பியவர், ஆயிரம் பிறைகளைக் கண்டவர் அத்தனைபேரும் ஆண் – பெண் பேதமின்றி, அந்த இரண்டு சடங்குகளையும் தெய்வ வழிபாடாக நடைமுறைப்படுத்தலாம்.
இந்த சாந்தி வழிபாடுகள் வயதின் அளவை வைத்து நிகழ்த்தப்படுவதால், குறிப்பிட்ட அந்த வயதுகளை எட்டியவர்களின் பிறப்புரிமை அது. யாரும் இதை மறுக்க முடியாது!!!
தம்பதிகளில் இழப்பு என்பது நிகழக்கூடிய ஒன்று. இழந்தவர்களும் வயதை எட்டுவார்கள். இருவரும் இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்தலாம் என்று சொல்ல முடியாது. அது, தாம்பத்தியத்தின் அடிப்படை யில் ஏற்பட்ட சடங்கு அல்ல. குறிப்பிட்ட அந்த வயதை எட்டியவரின் உரிமை.
இறந்தவர்களின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம் உண்டு. வெள்ளி விழா, தங்கவிழா, வைரவிழா… என்று அமரத்துவம் அடைந்தவர்களுக்காகவும் அனுஷ்டிப்பது உண்டு. ஆக, இழப்பைக் காரணம் காட்டி, உரிமையை மறுப்பது சரியில்லை.
பண்டைய நாட்களில் இழப்பைச் சந்தித்தவர்கள், கொண்டாட்டத்தைத் தவிர்த்தார்கள்; அவ்வளவுதான்!தனி மனிதனின் விருப்பு, வெறுப்பு செயல்பட்டது. ஆனால், இந்த சாந்தி வைபவங்களை இன்னார் செய்யலாம் செய்யப்படாது என்று சாஸ்திரம் சொல்லவுமில்லை, மறுக்கவும் இல்லை!
திருமணம் ஆகாதவரும் அந்த வயதை எட்டுவார். ஆகையால், அவருக்கும் உண்டு.
அவரவர்கள் தமது திருப்தி, தெய்வ நம்பிக்கை. ஆயுள் விருத்தி ஆரோக்கிய வாழ்வு என்ர வகையில் சஷ்டியப்த பூர்த்தி வழிபாடுகளை மேற்கொள்ளலாம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
எவருடைய வழிபாட்டையும் மறுக்கும் உரிமை நமக்கில்லை!!!