தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கட்டுரை- நன்றி: ஸ்ரீகர. சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்கள், சுவிஸில் இருந்து!
விரதம் எப்படி இருக்க வேண்டும்
“லங்கணம் பரம் ஒளஷதம்” “லங்கணம் பரம் ஒளஷதம்” என்று நம் முன்னோர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதன் பொருள் உபவாசம் இருப்பது உடலுக்கு மிகப்பெரிய மருந்து” என்பது தான். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே ‘விரதம்” என அழைக்கப்படுகிறது. ஆனால் இது விரதத்தின் முதற்நிலை எல்லா மதங்களிலும் உபவாசம் – விரதம் அல்லது உண்ணா நோன்பு சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் “உப” என்றால் ‘அருகில்” என்று பொருள். ‘வாசம்” என்றால் வசித்தல் அல்லது இருத்தல் என்று பொருள். ஆகவே உபவாசம் என்பதற்கு “இறைவனுக்கு அருகில் இருத்தல்” என்று பொருள் சொல்லப்படுகின்றது விரதம் என்றால் விடா முயற்சி, தவம், நோன்பு என்று கூறலாம்.
விரதம் மேற்கொள்ளும் போது கீழ்கண்டவற்றை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
சதாசர்வ காலமும் மனதில் இறைவனை மட்டுமே எண்ணி துதித்தல் வேண்டும். தம்மை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்ளாமலும், நாவிற்கு சுவையான உணவு வகைகளை உண்ணாமலும் இருத்தல் வேண்டும். கேளிக்கைச் செயல்களிலோ, வீண் விவாதங்களிலோ ஈடுபடக்கூடாது.பிறரைப்பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது. அடுத்தவர் மனம் துன்பப்படும்படியான தீய சொற்களைப் பேசக்கூடாது. மனதில் தான் என்ற கர்வத்தை அறவே அகற்ற வேண்டும். விரும்பத்தகாத செயல்களை செய்யக்கூடாது. அதிகமாக தானம் செய்ய வேண்டும். இவ்வாறு, தானம் செய்யும்போது முழு மனதுடன் கொடுக்க வேண்டும்.
வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன
ஶ்ரீகர.சோமாஸ்கந்த குருக்கள்
– தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
விரதம் எப்படி இருக்க வேண்டும்?