தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கும்பாபிஷேகம் தமிழில் குடமுழுக்கு அல்லது கும்பாபிசேகம் (கும்பாபிஷேகம்) ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்காகும். இதன்மூலம் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப்படுகிறது.
இந்த குடமுழுக்கு சம்பந்தமாக சில விடயங்களை இங்கு பார்ப்போம்
மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து ஆனது 12 ஆண்டுகளில் தனது சக்தியை இழந்துவிடும் என்பதால் அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ‘ஜீர்ணோத்தாரணம்’ என்று பெயர்.
பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.
இதற்கு ‘ரஜதபந்தனம்’ என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்கும்.
மிகப்பெரிய ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ‘ஸ்வர்ணபந்தனம்’ என்று பெயர்.
இந்த ஆலயங்களில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும்.
50 ஆண்டுகள் நிறைவடைவதை பொன்விழா ஆண்டு என்று சொல்வதையும் நாம் இங்கே நினைவில் கொள்ளலாம். ஸ்வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். மூலவருக்கு தங்கத்தை உருக்கி பந்தனம் செய்திருப்பதால் ஸ்வர்ணபந்தனம் என்று சொல்கிறார்கள்.
தகவல் தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா -இணைய தள மின் இதழ் ஆசிரியர் www.modernhinduculture.com
கும்பாபிஷேக குறிப்பு!