பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?

இன்று சில இடங்களில் அவதானித்து இருப்பீர்கள், பெண்கள் சிலர் தங்கத்தில் கொலுசு அணிந்திருப்பார்கள். அது தவறான செயலாகும்.
பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?
உண்மையில், பெண்கள் தங்கத்தில் கொலுசு செய்து அணிந்துகொள்ளக் கூடாது என்றே சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஜோதிட நூல்களும் இதையே வலியுறுத்துகின்றன. நம், உடலின் உறுப்புக்களை நவக்கிரக ரீதியாக இணைத்துப் பார்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது ஜோதிட சாஸ்திரம்.
அதாவது நவக் கிரகங்களில் ஒன்றான சூரியனை, நம் கண்ணுக்கு இணையாகச் சொல்கிறார் கள். சந்திரன் மூச்சு விடக்கூடிய மூக்குப்பகுதி என்கிறார்கள். முகமும் முகத்தில் வாய் என்ற பாகமும் இருப்பதால், செவ்வாய்க் கிரகத்தை இணையாகச் சொல்கிறார்கள்.
நம் உடலின் நரம்புகள் புதன் கிரகம். வயிறு சம்பந்தப்பட்ட பாகங்களை குருவாகச் சொல்லுகிறார்கள்.
இடுப்பிலிருந்து தொடை வரை இருக்கக்கூடிய பாகங்களை சுக்கிரனுக்கான இடம் என்கிறார்கள். தொடையிலிருந்து காலின் பாதப் பகுதி வரை சனி கிரகத்துக்குரிய இடம் என்று சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆக நம்முடைய பாதம் என்பது சனியின் அம்சம். ஆகவே, குருவின் ஆதிக்கம் நிறைந்த தங்கத்தை, மகாலக்ஷ்மியின் அம்சமான தங்கத்தை, இடுப்புக்கு கீழே அணிவதைத் தவிர்க்க சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது பெண்கள், தங்கத்தில் கொலுசு செய்து காலில் அணியக் கூடாது
No photo description available.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,( E Magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Organization.
www.modernhinduculture.com
பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?
Scroll to top