தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஐயப்ப விரதம் இருக்கும் அன்பர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதை பார்த்து இருக்கிறோம். ஏன் அவர்கள் கறுப்பு நிற ஆடை அணிகிறார்கள் நண்பர்களே?
பொதுவாக நமது இந்து மதத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு வர்ண ஆடை என்பது உண்டு இது ஒரு புறம் இருந்தாலும் விரதம் இருப்பதற்கு என்று தனியாக எந்த ஒரு நிறத்தையும் சாஸ்திரம் நிர்ணயம் செய்யவில்லை. விரதம் என்ற வார்த்தைக்கு மன உறுதி என்பது மட்டுமே பொருள். மனதில் உறுதியோடு இறைவனின் பால் முழு பக்தியையும் செலுத்துவோர்க்கு நிறம், மணம், சுவை எதுவும் முக்கியமில்லை.
ஆனால் ஐயப்ப விரதம் என்பது மிக கடினமான விரதம். சபரிமலைக்குச் செல்வதற்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் கறுப்பு நிற ஆடையை அணிந்துகொள்கிறார்களே என்ற ஐயம் உருவாகலாம். இந்த கடினமான விரத காலத்தில் மற்றவர்களை கவரும் விதத்தில் வண்ண வண்ண ஆடைகளை தவிர்ப்பது மிக முக்கியமாகிறது.
மற்றது ,ஐயப்ப விரதம் இருக்கும் பக்தர்கள் விரத காலத்தில் காட்டுவழிப்பயணம் செய்வார்கள். இந்த பயணம் மிகவும் கடுமையாக இருந்ததாலும், காட்டு மிருகங்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் கறுப்பு நிற ஆடை பயன்பட்டது.
அதே சமயம் ஐயப்பனை வேண்டி விரதம் இருந்தாலும் காட்டு வழி பயணத்தின் போது
தம்மை காப்பாற்ற வேண்டும் என்று காவல் தெய்வமான கருப்பண்ணசுவாமியையும் வேண்டியவாறு நடக்கும் போது , கறுப்பு நிற ஆடை கருப்பண்ண சுவாமிக்கும் உகந்தது என்பதால் கறுப்பு நிற ஆடையை ஐயப்ப பக்தர்கள் அணிகிறார்கள்.
விரதம் இருப்பதற்கு ஆடையின் நிறம் முக்கியமில்லை என்பதால் எந்த நிறத்தை உடைய ஆடையையும் விரத காலத்தில் அணிந்து கொள்ளலாம், அதே நேரத்தில் அந்த ஆடையானது அடுத்தவர்களின் கண்களைக் கவரும் வகையில் அமையக்கூடாது என்பதே இங்கு பிரதானமாகிறது நண்பர்களே!