மருத்துவக் குறிப்பு:
உயர் ரத்த அழுத்தத்துக்கான காரணங்கள்…
*மரபு
உடல் பருமன்
உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை
உணவில் அதிக உப்பு சேர்ப்பது
சிறுநீரகம், இதயம் சார்ந்த பாதிப்புகள்
சர்க்கரை வியாதி
பிறவி ரத்தக்குழாய் பாதிப்பு
புகை, மதுப்பழக்கம்
மனஅழுத்தம்உறக்கமின்மை, ஓய்வின்மை
வலி, ஹார்மோன் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உட் கொள்வது
குறைந்த ரத்த அழுத்தத்துக்கான காரணங்கள்…
*ரத்தசோகை
வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் நீர் வற்றிப்போவது
அதிகநேரம் வெயிலில் இருப்பது உள்ளிட்டவை.அறிகுறிகள் என்னென்ன?
தலைசுற்றல்
தலைவலி
மயக்கம்
வாந்தி
மூக்கில் ரத்தக்கசிவு
கண் பார்வை மங்குவது
மூச்சுத் திணறல்
கால் வீக்கம்
நெஞ்சு வலி
களைப்பு
படபடப்பு
குறிப்பு: சிலருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. திடீரென மயக்கம், பக்கவாதம், மாரடைப்பு என நேர்ந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால்தான் இதனை `சைலன்ட் கில்லர்’ (Silent Killer) என்கிறார்கள். எனவே, ரத்த அழுத்தத்துக்கு தொடர் பரிசோதனைகளும், சிகிச்சையும் மிக வும் முக்கியம்.