அறிந்து கொள்வோம் நண்பர்களே:;
என்னனெல்லாம் கடமை யாருக்கு வருமென்றால் – “கூவிக் கொள்ளும் காலத்தே”, யாருக்கு கூவிக் கொள்ளும் காலம் – “சுமந்து மாமலர் தூபம்”, யாரெல்லாம் பூ தூவி கடவுளை வழிபட்டார்களோ, யாரெல்லாம் ஊதுபத்தி கற்பூரமெல்லாம் காட்டினார்களோ- “சுமந்து மாமலர் தூபம் சுமந்தார்க்கே கூவிக் கொள்ளும் காலம்”.
கூவிக் கொள்ளும் காலமென்றால் என்ன – அதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நீ போகிறாய். வரிசையில் போகும் போது நீ கோவிந்தா கோவிந்தா என்று கத்துவாய். பழனி ஆண்டவன் கோவிலில் லைனில் நிற்கும் போது அரோகரா, அரோகரா என்று கத்துவாய். இது நீ கூவுவது. நீ லைனில் போகும் போது அங்கு சிலையாக நிற்கும் கடவுள், “என்ன சுப்பிரமணி” என்று உன்னைப் பார்த்து கேட்க வேண்டும். அவர் உன்னைக் கூவ வேண்டும். நீ கூவுகிறது பெரிய விஷயமில்லை. “கூவிக் கொள்ளும் காலம்” – எவ்வளவு அழகான வார்த்தைகள் பாரு. முருகர் உன்னைப் பார்த்து, ‘என்னப்பா வெங்கடேசா நல்லா இருக்கியா’ என்று கேட்கணும்.கடவுள் உனக்கு அருள் புரிய வேண்டும். அதற்கு நீ என்ன செய்ய வேண்டும். நீ பல தொண்டுகள் செய்ய வேண்டும். இப்படி சாதரணமாக நீங்கள் தொண்டுகள் செய்து வந்தாலே கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் நண்பர்களே!
“