தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-
பங்குனி மாதம். இந்த மாதத்தில்தான் பங்குனி உத்திரம் வருகிறது. மிக உன்னதமான நாள் இது.
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்!
பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.
முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாள் இது. மேலும் மதுரையில் மீனாட்சிதேவி- சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள். ராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் – ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாளும் பங்குனி உத்திரமே..
தமிழ் நாட்டில் சில ஆலயங்களில் நந்தி தேவருக்கும் திருக் கல்யாணம் நடை பெறும் காட்சிகளை பார்க்கலாம்.”‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்’ என்று பழமொழியே உண்டு..
இப்படி பங்குனி உத்திர பெருமைகள் பல உண்டு. எங்கள் அடுத்த பதிவில் நீங்கள் அவற்றை பார்க்கலாம்.நண்பர்களே.