இன்றைய சிந்தனை:-

ஆன்மிகம்:
ஆன்மாவை உணர வேண்டுமானால்…..
“மனிதர்களுக்குக் கண், காது, மூக்கு, பல் என அழகான உறுப்புகள் அமைந்திருந்தாலும் ஒரு புகைப்படம் எடுத்து அந்தப் படத்தைப் பார்த்துத்தான் ரசிக்க முடிகிறது.அதுபோல் உன் உள்ளே ஆன்மா என ஒன்று இருந்தாலும் உள்ளத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளால்தான் அதனை உணர முடியும்.

கல்லுக்குள் ஈரம் இருப்பதுபோல, உங்கள் உள்ளத்திற்குள் வளர்ச்சி இருக்க வேண்டும். உழைக்க வேண்டும், மற்றவர்கட்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். மற்றவனைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது.”