தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஆலயம் என்றால் ஒன்றுதான். இதில் சிறிய ஆலயம்,பெரிய ஆலயம் என்று ஒன்றுமில்லை நண்பர்களே. அது கோபுரம் அமையப் பெற்ற ஆலயம் என்றாலும் கோபுரம் இல்லாத ஆலயம் என்றாலும் ஒரு வித்தியாசமும் இல்லை.
உள்ளே குடியிருப்பவரை வைத்து தான் கோயி லுக்குப் பெருமை. அந்த வகையில்… பழைமையான கோயில்கள், புதிய கோயில்கள் இரண்டு வகையிலும் உள்ளே குடியிருப்பது ஒன்றுதான். ஆகையால் பாகுபாடு இல்லை.
இரண்டுக்கும் இடையே கட்டுமானப் பொருள்களிலும், பொருளாதார ரீதியில் அமைந்த வடிவமைப்பிலும் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கும். பண்டைய மனிதர்களுக்கும், இன்றைய மனிதர்களுக்கும் இடையே பாகுபாடு இல்லை. சிந்தனையில் பாகுபாடு இருக்கும். கோயிலின் உருவ மாற்றம் காலத்தின் கட்டாயம். பண்டைய காலத்திலும் பாரதத்தின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள கோயில்களில் உருவ மாற்றம் உண்டு.
இறை வழிபாடு வேண்டும். அதற்குக் குந்தகமில் லாத மாறுதல்கள் ஏற்கப்படுகின்றன. ஆகவே, வானளாவிய கோபுரங்களுடன் கூடிய கோயில் களே உண்மையான வடிவம் என்று எண்ணுவது கூடாது. நம் இதயம்கூடக் கோயில்தான். குடியிருக் கும் கடவுளின் பெருமையைக் குறைக்காத வகையில், எழுப்பப்படும் அத்தனை கோயில்களும் ஒன்றுதான்; பாகுபாடு இல்லை