தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்,தரிசித்திரிப்பீர்கள். அந்த வகையில் சங்காபிஷேகம் செய்வதன் பலனை அறிவோம் நண்பர்களே!
‘அபிஷேகம்’ என்பதை ஆகமங்கள் சிறப்பாக ‘ஜலார்ச்சனம்’ என்று சிறப்பித்துக் கூறுகின்றன.
எப்படி, பூக்களை கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ‘புஷ்பார்ச் சனை’ என்று கூறுகிறோமோ, அதுபோன்று ஜலம் மற்றும் அதுபோன்ற திரவியங்களை இறைவனுக்குப் பக்தியுடன் அளிக்கவேண்டும் என்று சிவாகமங்கள் கட்டளையிடுகின்றன.
எப்படி மரத்தின் வேர்ப் பகுதியில் விடப்படும் நீரானது அந்த மரத்தில் உள்ள அனைத்துப் பகுதி களுக்கும் சமமாகச் செல்கிறதோ, அதுபோன்று எல்லாம்வல்ல இறைவனுக்குச் செய்யப்படும் கிரியைகள் அனைத்து ஜீவராசிகளுக்கும் சென்று சேர்கின்றன. இவற்றை இப்படிச் செய்யவேண்டும்; இவற்றை இப்படிச் செய்யக்கூடாது என்று ஆகமங் களில் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இறைவனுக்கு எப்போது, என்ன பொருளை எந்த அளவுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது பற்றியும், அப்போது சொல்லவேண்டிய மந்திரங்கள் பற்றியும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், இறைவனுக்குச் செய்யப்படும் சங்காபிஷேகமும் சிறப்பானதாகும். தங்கம், வெள்ளி, செப்பு, வெண்கலம் போன்ற உலோ கங்களினால் ஆன கலசங்கள் மூலம் அபிஷேகம் செய்வது சிறப்பானது. அவற்றைவிட மிகச் சிறந்த பலன்களைத் தரக்கூடியது,
இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்வது. அனைத்துப் பாவங் களையும் போக்கக்கூடிய ஆற்றல் சங்கில் இருப்பதால், சங்காபிஷேகம் செய்வது மிகவும் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.
நன்றி: ஷண்முக சிவாச்சாரியார்.
collected by panchadcharan swaminathasarma.