உபாகர்மம், உபநயனம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

உபாகர்மம் முடிந்துவிட்டது. இருந்தாலும் அதுபற்றிய சிலபல விடயங்களை தெரிந்து கொள்வோமே!!

ஆவணி மாத அவிட்ட நட்சத்திரம் இந்த நாள்… பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து திருச்சி திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலின் பாஸ்கர் குருக்கள் விளக்கினார்.

‘நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்)இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை. அது ஞானக்கண். ஞானம் எனும் கண்ணைப் பெறுவதற்கான சடங்கு… உபநயனம். அதாவது, உபநயனம் என்றால் துணைக்கண் என்று அர்த்தம்.

ஞானம் எனும் கல்வி அறிவைப் பெற்றால் மட்டுமே ஒருவன் வாழ்வில் முழுப்பயனைப் பெறுகிறான் என்பது ஆன்றோர் வாக்கு.

கடவுளைப் பற்றி அறியும் அறிவே உயர்ந்த அறிவு. அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுகின்றனர். மகாவிஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று.

அதிதி & காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்து வைத்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இந்தச் சடங்கின் சிறப்பை உணரலாம். பூணூலை யக் ஞோபவீதம் என்பார்கள். அதாவது மிகவும் புனிதமானது என்று அர்த்தம்.

ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத் துவத்தை உணர்வது அவசியம். இதை குருமுகமாக, குருவைக் கொண்டே செய்ய வேண்டும். வீட்டில் ஆச்சார்யர்களை வரவழைத்து, காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பூணூல் போடுவார்கள்.

பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித் தரும் ஜபம்
ஓம் பூர்புவ, சுவஹ, தத் ஸவிதுர் வரோண்யம்,
பர்கோ தேவஸ்ய தீமஹி,
தியோ யோந, ப்ரசோதயாத்
என்பதாகும்.
இந்த மந்திரத்தை தினம் மூன்று வேளை கை மேல் அங்கவஸ்திரத்தால் மூடியபடி 108 அல்லது 1008 முறை ஜபிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம்!
சுண்டு விரல் அடியிலிருந்து ஒவ்வொரு கணுவாக எண்ணி
(3), மோதிர விரல் நுனி (1), நடுவிரல் நுனி (1), ஆட்காட்டிவிரல் நுனி (1), கட்டை விரல் இரண்டு கணு (2) ஆள்காட்டி விரலின் கீழ்க்கணு (1), நடுவிரலின் கீழ்க்கணு (1), மோதிர விரல் கீழ்க்கணு (1) என்று மொத்தம் 11 எண்ணிக்கையில் எண்ணி, இந்த மந்திரத்தை ஓத வேண்டும் ‘

இது பாவங்களைப் போக்கும். நல்ல ஆரோக்கியம், அழகு, பலம், வீரியம், தேஜஸ் முதலானவற்றைத் தருகிறது. மனதைப் பரிசுத்தப்படுத்துகிறது. ஜபிப்பவர்களுக்கு அஷ்டமா ஸித்திகளைக் கொடுக்கிறது. புத்திமானாகத் திகழச் செய்கிறது.

Image may contain: 1 person
உபாகர்மம், உபநயனம்.
Scroll to top