தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
தெய்வானை என்கிறோம். வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிப் பெருமான் என்று வழிபடுகிறோம்.
தெய்வானை என்று எப்படி பெயர் ஏற்பட்டது?
திருமாலின் ஆனந்தக் கண்ணீர்த் துளிகளிலிருந்து அவதரித்த சௌந்தரவல்லியும் அமிருதவல்லியும், முருகப் பெருமானை மணமுடிக்க வேண்டி, முறையே நம்பிராஜன் மகளான வள்ளியாகவும், தேவேந்திரன் மகளான தெய்வானையாகவும் வளர்ந்தனர்.
தேவேந்திரனும் இந்திராணியும், சூரபத்மனால் பற்பல கொடுமைகளுக்கு உள்ளாகி, தேவலோகத்திலிருந்து விரட்டப்பட்டு ஒளிந்து வாழ்ந்த காலத்தில், செல்வமகளைத் தங்களுடைய ஐராவத யானையிடம் விட்டுச் சென்றனர். யானை (அது, தேவ யானை) வளர்த்த பெண் என்பதால், அவள் தெய்வானை (தெய்வ யானை – தேவ சேனா – தேவ குஞ்சரி) ஆனாள்.
தெய்வானை என்று எப்படி பெயர் ஏற்பட்டது?