தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
திருவாதிரை -ஆருத்ரா தரிசனம்!
ஆன்மிக நூல்களில் இருந்து திரட்ட்பெற்ற தகவல்களை உங்களுடன் பகிர்கிறோம் நண்பர்களே!
நடராஜப் பெருமான் ஆடிக்கொண்டே ஐந்து தொழில்களை விளையாட்டாகச் செய்கிறார் அம்பலத்து ஆடுவான். அவன் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கினால் இக, பர நலன்களைப் பெறலாம். வாழ்வில் ஆனந்தம் வேண்டுவோர் ஆனந்த தாண்டவமூர்த்தியை வணங்க வேண்டும்.
”அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறுஇட்டு
அணுவில் அணுவினை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவினை அணுகலும் ஆகும்”
–என்கிறது திருமந்திரம்.
அணுவுக்குள் அணுவாய் ஆதிப்பிரான் ஆடிக்கொண்டு இருக்கிறார். இந்த ஆன்மிக மெய்ஞ்ஞானத்தை, இன்றைய விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டு வியந்து பார்க்கிறது. நாமும், அணுவுக்கு அணுவாக நின்று ஆடும் நடராசரை மனதுக்குள் தியானித்து அருள் பெறுவோம்!
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா இயற்பியல் அணு ஆய்வு மையம்் European Organisation for Nuclear Research வளாகத்தின் முன் பெரிய நடராசர்் சிலையை 2004 ஜூன் 18 அன்று நிறுவியுள்ளது. டாக்டர் பிரிட்ஜாப் என்ற இயற்பியல் விஞ்ஞானி தன் நூலில் நடராசர் நடனத்தை பிரபஞ்ச இயக்கத்தோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார். இத்தகு மகிமைகள் கொண்ட தாண்டவத்தை தரிசித்து அதிலேயே லயித்துவிட, நமக்கே உள்ளம் துடிக்கும்போது, அருளாளர் களைக் கேட்கவா வேண்டும்?!
தகவல் தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.