பூணூல் / இடது தோளில் / முப்புரி நூல் – அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பூணூல் / இடது தோளில் / முப்புரி நூல் – அறிவோம்!!!
பூணூல் இடது தோளில் அணிய வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்போதும் பூணூல் இடது தோளில் இருக்க வேண்டும். இடது தோளில் பூணூல் இருக்கும்போது அதற்கு ‘உபவீதி’ என்று சிறப்புப் பெயர்.
உபவீதியாக எப்போதும் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் (ஸதோப வீதினா பாவ்யம்) சொல்கிறது. தேவர்களுக்கு பணிவிடை செய்யும் வேளையில் பூணூல் இடது தோளில் இருக்க வேண்டும். அதாவது ‘உபவீதி’யாக இருக்க வேண்டும். நம் முன்னோர்களை ஆராதிக்கும் வேளையில் பூணூல், வலது தோளில் இருக்க வேண்டும். ரிஷிகளை வழிபடும் வேளையில் இரு தோளிலுமாகத் தொங்க வேண்டும். அதாவது மாலை போல் அணிய வேண்டும் என்று மறை கூறும்.
முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி. மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை. காலம் மூன்று. மூர்த்திகள் மூன்று. வேதம் மூன்று. பூணூலின் பிரிவுகளும் மூன்று. மூன்று எண்ணிக்கை முற்றுப் பெற்றதாகக் கூறும். ஏலத்தில் மூன்று முறை அழைப்பார்கள். நீதிமன்றத்திலும் மூன்று முறை அழைப்பார்கள். அது முற்றுப் பெற்றதாகக் கருதுகிறோம். பூணூல் பரமாத்ம வடிவம் (யஞ்ஜாக்ய: பரமாத்மாய:) பரமாத்மா மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரிபாத் ஊர்த்வ…) மூன்றடி அளந்தவர். அப்போது முற்றுப் பெற்றது.
தேவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் – இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு ஆதாரமான பூணூலும் மூன்று பிரியாக இருப்பது பொருந்தும். அவன் ஆராதிக்கும் காயத்ரீ மூன்றடிகளோடு விளங்குபவள்.
அவளை மூன்று வேளை வழிபட வேண்டும். அதற்குக் காரணமான பூணூலும் மூன்று பிரியாக வந்தது சிறப்பு.
பூணூல் அணிதல் என்பது பல மரபு சார்ந்த, ஆன்மீக மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சடங்கு ஆகும். முதன்முதலில் பூணூல் அணியும் சடங்கு உபநயனம் என அழைக்கப்படுகிறது, இதன் மூலம் ஒரு நபர் இரண்டாம் பிறப்பு பெற்றதாகக் கருதப்பட்டு, மந்திர அறிவுரைகளைப் பெற்று ஆன்மீக தெளிவைப் பெறுகிறார்.
மூன்று பிரதானமான விடயங்களைப் பார்ப்போம்!
இது தீய பழக்கவழக்கங்களைத் தவிர்த்து, ஆன்மீக வழியில் மனதைச் செலுத்தி, மனதின் தூய்மையைப் பேணுவதைக் குறிக்கிறது.
சமூக அடையாளமும் பொறுப்பும்: குடும்பத் தலைமை மற்றும் சமூகத் தலைமைப் பொறுப்புகளை உணர்த்துவதற்காக இது அணிவிக்கப்பட்டது.
மந்திரங்களின் அறிவுரை: இது காயத்ரி மந்திரம் போன்ற மந்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் அடையாளமாகும், இது ஆன்மீகப் பார்வையைப் பெற உதவுகிறது.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
பூணூல் / இடது தோளில் / முப்புரி நூல் – அறிவோம்!!!
Scroll to top