இறைவன் படைத்ததை இறைவனுக்கு படைப்பதில் வேறுபாடு ஏன் ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
இறைவன் படைத்ததை இறைவனுக்கு படைப்பதில் வேறுபாடு ஏன் ???
பக்தியுடன் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை அளித்தாலும் ஏற்றுக் கொள்வேன்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. குறிப்பிட்ட இந்த இலைதான் வேண்டும் எந்தக் கடவுளாரும் சொல்லவில்லை , கேட்கவில்லை!!!
இந்தப்பழம்தான் வேண்டும் என்று குறிப்பாக எதையும் கடவுளார் கூறவில்லை. அதை, பக்தர்களது விருப்பத்துக்கு விட்டு விட்டார்!
பூரணத்துவம் அடையாதவர்களிடமே விருப்பு- வெறுப்பு இருக்கும். இறைவன் பரிபூரணமானவர். ஆகையால், அவருக்கு அர்ப்பணிக்கும் பொருட்களைத் தங்களது விருப்பப்படி தேர்ந் தெடுக்கலாம். சிவ பெருமானுக்கு துளசியையும் அளிக்கலாம்.
குறிப்பிட்ட இறை உருவத்துக்கு, குறிப்பிட்ட இலை சிறந்தது என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும். உதாரணமாக… வில்வம்- சிவனுக்குச் சிறப்பு; துளசி- நாராயணனுக்கு உரியது என்று கூறப்பட்டிருக்கும். குறிப்பிட்ட ஒன்றின் சிறப்பை உணர்த்த புராணக் கதைகள் அவ்வாறு கூறும். உடனே, மற்றக் கடவுளாருக்கு சிறப்பு இல்லை என்று நாம் கருதக் கூடாது. வழிபாடு விடயங்கள் பலதில் பலரும் தம் எண்ணப்படி சொல்வதை பல இடங்களிலும் இன்றைய காலகட்டத்தில் காணலாம்!!!
‘பிள்ளையாருக்கு 20 இலைகள் சிறப்பானவை’ என்று புராணம் கூறும். அவற்றில் மாவிலையும் ஒன்று. அதற்காக, அன்றாடம் மாவிலையால் அவருக்கு அர்ச் சனை செய்வது உண்டா? இல்லையே!!!
ஈசனுக்குத் தாழம்பூ கூடாது!’ என்றொரு தகவலும் உண்டு. அதற்கான ஒரு கதையும் இருக்கும். அதே நேரம் ஈசனின் தேவியான அம்பாளுக்கு தாழம்பூ அர்ப்பணிக்க லாம் என்றும் சொல்லும். ‘எனில், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை தாழம்பூவால் அர்ச்சிக்கலாமா?’ என்றொரு கேள்வி பிறக்கும்! தாழம்பூ நறுமணத்துடன் திகழும் உமையை ஏற்கும் சிவனார், நறுமணத்தை எப்படி நுகராமல் இருப்பார்?!
எனவே, இறை வடிவங்களுக்கு அர்ப்பணிக்கும் பொருட்களில் உகந்தது, ஆகாதது என்று விருப்பு- வெறுப்புகளை அலசுவது வீண்.
சபரி, தான் ருசித்து- ருசியாக உணர்ந்த பழங்களை ஸ்ரீராமனுக்கு அளித்தாள். வேடனான கண்ணப்பர் தனக்குப் பிடித்த உணவையே இறை வனுக்கு வழங்கினார். தான் சூடிய மாலையை, ஆண்டவனுக்கு அர்ப்பணித்தாள் ஆண்டாள்!
துளசிக்கென்று ஒரு நறுமணம் உண்டு. அது, உடலுக்கும் உள்ளத்துக்கும் உகந்தது. உகந்த பொருளை தன் பிரியமான இறை உருவத்துக்கு அளிக்கலாம். நறுமணம் கமழும் புஷ்பங்களும், இலைகளும் ஆண்டவனின் படைப்புகள்தான்!!! ஆகவே நண்பர்களே . அவன் படைத்ததை அவனுக்கு அர்ப்பணித்து மகிழலாம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
இறைவன் படைத்ததை இறைவனுக்கு படைப்பதில் வேறுபாடு ஏன் ???
Scroll to top