தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கோயில்கள் பரவலாக நிகழும் திருவிளக்கு பூஜையில் சிறுவர், சிறுமிகளும்… ஏன் ஆண் பக்தர்களும்கூட அமர்ந்து பூஜிக்கிறார்கள். இதில் பிழை ஏதும் இல்லை!!!
திருவிளக்குப் பூஜை என்பது பெண்களுக்கு மட்டுமே என்ற சிந்தனை சிலருக்கு உண்டு! ஆனால் அது அப்படி அல்ல!
திருவிளக்கு பூஜை சம்பிரதாயத்தில் வந்தது. ஆண் – பெண் பேதமின்றி அத்தனைபேரும் வழிபடலாம். ‘பகவதி சேவை’ என்ற பெயரில், திருவிளக்கில் அம்பாளை பூஜிப்பார்கள் கேரளத்து மக்கள். அதில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்; பெண்களுக்கு இடமில்லை.
ஏழுமலையானுக்கு தீபமேற்றி தீபத்தில் அவரை வழிபடுவர். அதில் ஆண்கள் இடம்பெறுவர். தம்பதியாக செயல்பட்டால் பெண்களுக்கு இடமுண்டு. மங்கலப் பொருட்களில் தீபமும் ஒன்று. மஞ்சளில் பிள்ளையாரை வழிபடுவோம். கூர்ச்சத்தில் (தர்ப்பையில்) தேவர்களையும், தென் புலத்தாரையும் வழிபடுவோம். தேங்காயில் (கும்பத்தேங்காய்) தேவர்களை வழிபடுவோம். அதேபோன்று, மங்கலப் பொருளான ஜோதியில் இறைவனை வழிபடலாம். தகுதி இருப்பவர்கள் எல்லோரும் ஈடுபடலாம்.
செய்யுள்களையும், போற்றி போற்றி என்று சொல்லியும் வழிபடும் தகுதி இருக்கவேண்டும்.
சிறுபிள்ளைத்தனமாக செயல்பட்டு, அதன் தரத்தை குறைக்க முற்படக்கூடாது. யாராக இருந்தாலும் இறைவனை எண்ணி அடக்கத்துடனும், பண்புடனும் செயல்பட வேண்டும். அதற்குண்டான பலன் நிச்சயம் உண்டு நண்பர்களே!!!
நன்றி: ப்ரம்மஸ்ரீ சேஷாதத்திரிநாத சாஸ்திரிகள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

கோயில்கள் பரவலாக நிகழும் திருவிளக்கு பூஜையில் சிறுவர், சிறுமிகளும்… ஏன் ஆண் பக்தர்களும்கூட அமர்ந்து பூஜிக்கிறார்கள். இதில் பிழை ஏதும் இல்லை!!!