தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
விஞ்ஞான வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பின் காரணமாக, நமது பொக்கிஷமான வேதங்கள், புராணங்கள், ஜோதிட சாஸ்திரங்கள் ஆகியவை நமக்குச் சுட்டிக்காட்டிய அற விஷயங்களைப் புறக்கணிப்படாது!!! சாஸ்திரங்கள் உன்னதமானவை ! சாஸ்திரம் என்ன சொல்கிறது??? சிறு குறிப்பு!!!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற சொல்வழக்கு, பண்பின் அடிப்படையில் வெளிவந்தது. உலக மக்கள் அத்தனைபேரும் ஒரு குடும்பம் என்கிறது வேதம் (வஸீதை வகுடும்பகம்). ‘பிறப்பை அளித்த சக்தி, தாய்; என்னை இயக்கும் சக்தி, தகப்பன்; தென்படும் மனித இனம், எனது பந்துக்கள்; மூவுலகமும் எனது பிறப்பிடம்!’ என்கிறது புராணம் (மாதாச பார்வதீதேவீ பிதாதேவோ மஹேச்வர: பாந்தவா: சிவபக்தாச ஸ்வதேசோபுவனத்ரயம்). ‘இயற்கையின் அன்பளிப்பை எல்லோரும் பகிர்ந்து உண்டு மகிழ வேண்டும்; தான் மட்டும் தனியாக உணவருந்தக் கூடாது’ என்கிறது வேதம் (தேவலா கோபவதிகேவலாதீ). பசித்தவனுக்கு உணவளிப்பது அறமாகக் கருதப்படும்.
சங்கிலித் தொடர்போல் மனித இனம் அறுபடாமல் வளர அன்பும், பண்பும், அறமும் அரணாகப் பாதுகாப்பு அளித்தன. அறத்தின் பரிந்துரையில் உருவெடுத்தது திருமணம். அறப் பின்னணியில் நிகழும் இனப்பெருக்கம் மகிழ்ச்சியான வாழ்வுக்குத் துணைபுரியும். வாழ்வின் நுழைவாயில் திருமணம். பரிணாம வளர்ச்சியில் மனத்தில் மலர்ந்த எண்ணங்களை இருவரும் பரிமாறிக்கொண்டு நிறைவை எட்டும்போது, அதன் அடையாளமாக மழலைச் செல்வம் உருவாகும். அன்பு, பண்பு, அறம் ஆகியவற்றுடன் இணைந்து வளரும் வாரிசுகள், நாகரிக வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி பிறருக்கும் உணர்த்தும். ஆறறிவு பெற்ற இனம் அறப் பின்னணியில் திருமணத்தைச் சந்தித்து, இனப்பெருக்கம் நிகழ வேண்டும் என்று வேதம் வலியுறுத்தும்.
ஐம்பெரும்பூதங்களை தேவதாத்மாவாக பாவித்து வணங்கும் பண்பைப் பெற்றது நம் நாடு. அக்னியை வணங்கச் சொன்னது ரிக் வேதம். காற்றை வணங்கச் சொன்னது யஜுர் வேதம். சூரியனை வணங்கச் சொன்னது ஸாம வேதம். நீரை வணங்கச் சொன்னது அதர்வ வேதம். நீரும், நெருப்பும், காற்றும் உலகுக்கு ஆதாரம்; உடலுக்கும் ஆதாரம். ஆண்- நெருப்பு; பெண் நீர். சுக்லம் அதாவது ஆணின் பீஜம் நெருப்புக்குச் சமானம்; பெண்ணின் சோணிதம் நீருக்குச் சமானம். நெய் போன்றவள் பெண்; தணல் போன்றவன் ஆண் என்கிறது புராணம் (கிருதகும்ப சமா நா நீ தப்தாங்காரசம: புமான்). வெப்பம் நெய்யை உருக்கும். இருவரது மனமும் இணைவதைத் திருமணம் என்போம். அந்த இணைப்பின் இறுக்கத்துக்கு ஜோதிடம் உதவுகிறது. அறிவோம்! தெரிவோம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
ஜோதிட சாஸ்திரங்கள் ஆகியவை நமக்குச் சுட்டிக்காட்டிய அற விஷயங்களைப் புறக்கணிப்படாது!!!