விக்கிர வழிபாட்டின் முக்கியத்துவம்!!! அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இறைவன் ஒளி வடிவானவர், ஆதியந்தம் இல்லாதவர் என்றே புராணங்களும் வேத நூல்களும் விவரிப்பதாகப் பெரியோர்கள் சொல்கின்றனர். அப்படியிருக்க, விக்கிரக ஆராதனை எதற்காக? இறைவனை விக்கிரகத் திருவுருவாக்கி வழிபடுவதன் தாத்பரியம் என்ன? அறிவோம் தெளிவோம்!!!
விக்கிரக ஆராதனை வேண்டும். விக்கிரகம் என்றால் உருவம். அருவமான கடவுளை உருவத்தில் பார்க்க வேண்டும். உடலில் உள்ள ஆன்மா கண்ணுக்குப் புலப்படாது. உடல், உள்ளம் ஆகியவற்றின் செயல்பாட்டை வைத்து உள்ளே ஆன்மா இருப்பதை உணர்வோம். உலகம் என்ற உடலுக்குள் கடவுள் என்கிற ஆன்மா உறைந்திருக்கிறார். உலகம் இயங்குவதைப் பார்த்து, அதன் இயக்குநரை உணர்வோம்.
பாலில் நெய் பரவியிருப்பது போல் எங்கும் பரவி இருக்கும் சக்தியே கடவுள். ஒரு துளி பாலிலும் நெய்யின் அம்சம் இருக்கும். இடைவெளி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கேல்லாம் நிறைந்திருப்பவர் இறைவன். அவர், பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பார். இப்படியும் சொல்லலாம்… அவர்தான் பிரபஞ்ச வடிவில் தோற்றமளிக்கிறார். இந்த பிரபஞ்சத்தில், ஓர் ஊசி குத்தும் இடம்கூட அவர் இல்லாமல் இல்லை. கடவுளுக்குப் பணிவிடை செய்து மகிழ, நமது விருப்பத்தைப் பெற அவருக்கு உருவம் வேண்டும்.
அவர் விக்கிரகத்திலும் இருக்கிறார்; நம் மனத்திலும் இருக்கிறார். மனத்தில் இருப்பவரை விக்கிரகத்தில் இருத்துகிறோம்!
புஷ்பத்தை அள்ளியெடுத்து, நமது பெருமூச்சு புஷ்பத்தில் படும்போது, மனத்தில் இருக்கும் இறைவன் மூச்சு வாயிலாக புஷ்பத்தில் சேர்ந்ததாக நினைத்து விக்கிரகத்தில் சேர்க்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு, அவரது புஷ்ப பிரசாதத்தை முகர்ந்து பார்க்க வேண்டும். புஷ்பத்தில் இணைந்த கடவுள், நாம் முகர்ந்து பார்க்கும்போது உடலின் உள்ளே சென்று நம் மனத்தில் ஒதுங்கி விடுவார் என்கிறது பூஜாவிதானம். ‘எங்கிருந்து வந்தாரோ அங்கேயே மீண்டும் குடியிருத்துகிறேன்’ (யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி) என்று இறைவனை மனத்தில் குடியிருத்துவது உண்டு. இப்போது, மனத்தில் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் நிலைத்திருக்கும். ஒவ்வொரு நாளும் கடவுளை வணங்க, இந்த பூஜா விதானம் பயன்படும்.
ஒவ்வொரு நாளும், மனதில் இருக்கும் கடவுளை இறக்கி வைத்து அவரை வழிபட, ஓர் உருவம் வேண்டும். அதுதான் விக்கிரகம்.
உருவம் இல்லாத நிலையில் 16 பணிவிடைகள் செய்ய இயலாது. ஆகவே, ஸ்தூலமான விக்கிரகத்தில் சூட்சுமமான கடவுளை இருத்தி உபசாரம் செய்கிறோம். நம்மைப் போன்று பசி, தாகம் போன்றவை கடவுளுக்கு இல்லை என்பதால், நிவேதனத்தை அவரது பார்வைக்கு வைத்துவிட்டுத் திரும்பப் பெறுகிறோம். சூட்சும வடிவில் இணைந்திருக்கும் கடவுளின் ஸ்தூல வடிவத்துக்கு ஷோடசோபசாரம் செய்வோம். வெறும் சிலைக்கு உபசாரம் இருக்காது. நாம் செய்யும் உபசாரம், சிலையில் ஒளிந்திருக்கும் கடவுளுக்கு. உபசாரத்துக்காக விக்கிரகம் வேண்டும்.
அடிக்கடி பூஜையில் ஈடுபட்டு பழக்கம் வரும்போது, நம் மனத்தில் கடவுள் நிரந்தரமாகக் குடியேறிவிடுவார். தியானம் வழியாக அவரை உபாஸிக்கும் அளவுக்கு உயர்ந்துவிடுவோம். உபாசனையால் அவர் நம் மனத்தில் இடம்பிடிக்க, உலகை மறந்து அவர் நினைவில் லயிக்கும்போது, அந்த நிலை கடவுளை உணரவைத்துவிடும். வேதம், புராணம், இதிகாசங்கள் அத்தனையும் விக்கிரகத்தின் உருவங்களைப் பரிந்துரைக்கும். புராணத்தில், கடவுளின் உருவங்களை விளக்கும் பகுதிகள் நிரம்ப இருப்பதால், கடவுளை வழிபட விக்கிரகம் நிச்சயம் வேண்டும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be an image of temple and body of water
விக்கிர வழிபாட்டின் முக்கியத்துவம்!!! அறிவோம்!
Scroll to top