சிராத்தம் செய்யும் இடம்!

 
தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
சிராத்தம் செய்யும் இடம்!
எது எது எங்கே எப்படி எப்ப செய்யப்பட வேண்டும் என்று சாஸ்திரங்களும் ஆகம விதிகளும் மிகத் தெளிவாக சொல்லி வைத்திருக்கின்றன !!! நாம் நினைத்தவாறு செய்து விடமுடியாது! யாரும் தவறாக செய்தால் அது உதாரணமும் இல்லை! அவர் அப்படி செய்தார் இவர் இப்படி செய்தார் ஆகவே நானும் அப்படி செய்கிறேன் என்ற வாதங்கள் ஏற்புடையதல்ல !!! நாங்க செய்வதை சரியாக செய்வோம் நண்பர்களே!!!
‘இறை உருவ வழிபாடு, வேள்வி, ஜப ஹோமங்கள் மற்றும் முன்னோர் ஆராதனை ஆகியவற்றை, மேற்கூரை உள்ள இடத்தில் செய்வதே சிறப்பு’ என்கிறது தர்ம சாஸ்திரம். முதல் வேள்வியை அறிமுகம் செய்த வேதம், கூரையுடன் அமைந்த இடத்தையே பரிந்துரைத்தது. (அந்தர்ஹி தோஹி தேவலோகோ…) வீட்டில் கொடுக்கும் திதிக்குத் தனிச்சிறப்பு உண்டு.
புண்ணிய நதிகள், புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று நீராடி, தீர்த்த சிராத்தங்கள் நிகழ்த்தலாம். இதற்கென தனியே நேரம், காலம் இருப்பதால், அந்த இடங்களில் திதி கொடுப்பது தவறில்லை. ஆனால், வீட்டில் கொடுக்கவேண்டிய திதியை நதி மற்றும் குளக்கரைகளில் கொடுப்பது தவறு. அது வேறு; இது வேறு! அதாவது… ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் நதி, குளங்களில் நீராடி, அங்கு திதி கொடுப்பதில் தவறு இல்லை. முன்னோர்களை வழிபட வீட்டைப் பயன்படுத்தலாம். வீடு சிறியது அல்லது பொருளாதார வசதி இல்லாதவர்கள், ஆற்றங்கரையில் திதி கொடுக்கலாமே தவிர சகல வசதிகள் இருந்தும் வீட்டில் சிராத்தம் திதி செய்வதை தவிர்ப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல!!!
இருப்பினும் கூடியவரை வீட்டில் திதி கொடுக்க முயற்சியுங்கள். இதனால், இளைய வயதினருக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் திதி கொடுக்கும் முறை , அதனது பலன்கள் , கட்டாயம் அவசியம் போன்றவை பரிச்சயமாகும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be a graphic of ‎text that says '‎நவின நவிீன கலை 高さももかかる。 கலாச்சார กับน ஆகும இந்து இந்து நிறுவனம் נעה កូរសភ្ូ MODERNHINDU MO MODERN HINDU MHC ARIS ARTS ORG. ORG. HINDU AGAMIC CULTURAL CULTURAL‎'‎
சிராத்தம் செய்யும் இடம்!
Scroll to top