தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காயை வைப்போம். ஏன் மற்ற எந்தக் காயையும் வைப்பதில்லை? முன்னோர்கள் காரணத்தோடுதான் எதையும் சொல்லி வைத்துள்ளார்கள்!!!
மாம்பழத்தை ஞானப்பழம் என்று அழைப்பதை திரைப்படத்திலும் பார்த்திருக்கிறோம். தலைப்பகுதியைத் தாங்கிப்பிடிப்பதால் ஞானத்தைத் தரவல்ல மாவிலையை பயன்படுத்துகிறோம்.
தலைப்பகுதியாக தேங்காயை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதே நாம் தரும் விளக்கம், மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் என்ன என்று எண்ணுகிறீர்கள். தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் அமைந்துள்ளன.
இறைவனுக்கு உள்ள திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது ‘சோம சூர்ய அக்னி லோசனாயை நம:’ என்று உச்சரிப்பார்கள். லோசனம் என்றால் கண்கள் என்று பொருள். அதாவது வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும் நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் மட்டுமே. இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய மூன்று கண்களை உடைய தேங்காயைத் தலைப்பகுதியாக உருவகப்படுத்தி கலசத்திற்கு வைக்கிறோம்.
இயற்கையாகவே தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர் உள்ளிருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது. வேறு எந்த காய்க்கும் இல்லாத சிறப்பு தேங்காய்க்கு இருப்பது தற்போது புரிந்திருக்கும். கலசத்தில் இறைவனை உருவகப்படுத்தும்போது இறைவனின் தலைப்பகுதியாக இருப்பதற்கு தேங்காய்தான் பொருத்தமானது என்பதை நம் முன்னோர்கள் வைத்திருப்பதற்கான காரணமும் இதுவே.
கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காயை வைப்போம். ஏன்?