”ஓம்” என்ற பிரணவ மந்திரம் இல்லாமல் வேதியர்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம், ………………..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

நீங்கள் எனக்கு சென்றாலும் மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில் ”ஓம்” என்ற பிரணவ மந்திரம் இல்லாமல் வேதியர்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம், வேதங்கள் ஓத மாட்டார்கள். நண்பர்களே இதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்.

‘ஓம்’ என்பது அனைத்து மந்திரங்களுக்கும் சிரசாக விளங்குவது. தத்துவம் என்பதே உணர்ந்து அறிவதுதான். அனைத்து தெய்வங்களின் சக்திகளும் இந்தப் பிரணவ மந்திரத்தினுள் அடக்கம். அனைத்து வேதங்களும் மந்திரங்களும் இதனுள் அடக்கம்.

பிறகு, மற்ற மந்திரங்களை எதற்காகக் கடவுள் அருளினார் என்ற சந்தேகம் பலருக்கும் எழக்கூடும். காரணம், எப்படி ஒரு விதையின் மூலம் ஒரு விருட்சம் உருவாகி, அதில் தோன்றும் கனிகளிலிருந்து கிடைக்கும் விதைகளிலிருந்து எண்ணற்ற விருட்சங்கள் உருவாகின்றதோ… அதேபோல் ‘ஓம்’ என்னும் சொல்லானது, வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் என்று அனைத்துமாக விளங்குகிறது.

மரத்தின் வேரில் தண்ணீர்விட்டு மரத்தின் மூலமாகப் பலன்களைப் பெறுவதுபோல், ஒவ்வொரு மந்திரத்தின் முன்பாகவும் நாம் சொல்லும் பிரணவ மந்திரத்தின் சேர்க்கை அந்த மந்திரத்துக்குச் சக்தி கொடுப்பதாக விளங்குகிறது.

எனவே, தாங்கள் எந்த மந்திரத்தைச் சொல்வதாக இருந்தாலும், ‘ஓம்’ என்னும் பிரணவத்தைச் சேர்த்துச் சொல்லவேண்டியது அவசியம். அதன் ஆற்றலை நம்முடைய அனுபவத்தினால்தான் உணர முடியும்.

எல்லாம் வல்ல எம்பெருமான் சிவனார், பிரணவத்தின் உயர்வை உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம்கொண்டார். அதன்படி தன் மகனிடம் பிரணவத்தின் பொருளைக் கேட்டு உணர்வதாக ஓர் அருளாடல் நிகழ்த்தினார். அதன்மூலம் உலக மக்கள் அனைவரும் பிரணவத்தின் உயர்வையும் அதன் ஆற்றலையும் உணரச்செய்தார்.

எனவே, அனைத்து மந்திரங்களுக்கும் விதையாக விளங்கும் பிரணவமானது அனைத்து மந்திரங்களுக்கும் பிரதானமானதாகக் கருதிப் பயன்படுத்த வேண்டும்.

நன்றி: ஷண்முக சிவாச்சாரியார்,

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
”ஓம்” என்ற பிரணவ மந்திரம் இல்லாமல் வேதியர்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம், ………………..
Scroll to top