தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
பச்சைத் திராட்சையைப் போலவே உலர்திராட்சையிலும் நிறைய சத்துகள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் பி மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளன. குழந்தைகளின் எலும்புகள் உறுதியாகவும், பற்கள் வலுப்பெறவும் தேவையான கால்சியம் உலர்திராட்சையில் நிறைந்திருக்கிறது. இரவு உணவுக்குப்பின் பத்து உலர்திராட்சைப் பழங்களைப் பால் சேர்த்துக் காய்ச்சிச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எலும்பு மஜ்ஜைகளில் ரத்தம் ஊறவும் உதவுகிறது உலர் திராட்சை. அவ்வப்போது சில திராட்சைகளை வாயில் போட்டு மென்று, அதன் சாற்றை மெதுவாக விழுங்கி வந்தால் எலும்பு மஜ்ஜைகள் பலமடைவதோடு, ரத்தம் அதிகமாகச் சுரக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்குப் புத்துணர்வைத் தரும். கர்ப்பிணிகள் உலர்திராட்சையை பாலில் கலந்து கொதிக்கவைத்துக் குடித்துவந்தால், பிறக்கும் குழந்தை நல்ல உடல்நலம் பெறும்.