தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கும்பாபிஷேகம் – ஓர் தகவல்!!
ஆலயங்களில் மூலஸ்தானம் ( கருவறை) அல்லது வேறும் இறைவன் சிலைகள் பின்னம் ( பழுது, சிதைவு) அடைந்திருந்தால்… அந்தக் குறையை அகற்றி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். எப்படி?
பஞ்சலோக விக்கிரகத்திலும் நிச்சயம் சாந்நித்தியம் உண்டு. எனவே, அவற்றை வைத்து பூஜிப்பதில் தவறில்லை. ஆனால், சிதைவு அடைந்த மூலவர் விக்கிரகத்தை அப்படியே விட்டு விட்டு, பஞ்சலோக விக்கிரகத்துக்கு பூஜையைத் தொடர்வது சரியல்ல.
அந்த சிதைவடைந்த மூலவரை உரிய முறைப்படி சரி செய்ய வேண்டும்!
பாலாலயம் வைத்து, சிதைந்த சிலையை சரி செய்வதுடன், கும்பாபிஷேகம் செய்து சாந்நித்தியத்தை மீண்டும் இருத்த வேண்டும்.
அதுவரை, பஞ்சலோக விக்கிரகத்துக்கு பூஜை செய்யலாம். சிலையை மாற்றுவதற்காக வருஷக் கணக்கில் காலம் கடத்தக் கூடாது. முடிந்தவரை ஆலய பணிகளை முடிக்க வேண்டும். சிவாச்சாரியரை அணுகி, அவரது பரிந்துரைப்படி செயல்பட வேண்டும்;
எல்லோருக்கும் நன்மை உண்டு.
நன்றி: பிரம்மஸ்ரீ சேஷாதிரிநாத சாஸ்திரிகள்.
பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

Comments by Dr. N. Somash Kurukkal