தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
விநாயகர் வழிபாடும் அருகம் புல்லும்!!!
விநாயகரை வழிபடும் புது அருகம் புல்லால் வழிபடுவது மிக மிக பிரதானமாகிறது! விநாயகர் வழிபாட்டின் போது பூஜைத் தட்டில் கட்டாயம் அருகம் புல்லு இருப்பதை காணலாம்.
அப்படி அருகம் புல்லின் மகத்துவம் என்ன ? அறிவோம்
பிள்ளையார் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளை சமர்ப்பித்து அவரை வழிபடவேண்டும் என்றாலும்கூட, அருகம்புல்லுக்கு தனிச்சிறப்பு உண்டு.
தேவர்களைத் துன்புறுத்திய அனலாசுரனை எவராலும் அழிக்கமுடியாத நிலையில், போர்க்களம் புகுந்த பிள்ளை யார், அப்படியே அவனை விழுங்கி விட்டாராம். அதனால் அவருடைய திருமேனி வெப்பத்தால் தகித்தது. கங்கை நீரை குடம் குடமாகக் கொண்டுவந்து அபிஷேகித்தும், இன்னும் என்னென்னவோ முயற்சிகள் செய்தும்கூட விநாயகரின் உடல் வெப்பத்தைத் தணிக்க முடியவில்லை. இன்னும் அந்த வெப்பம் அதிகரித்துக் கொண்டு போனது!
இந்த நிலையில் மிக அதிகமான முனிவர்கள் ஒன்று சேர்ந்து அருகம்புல்லால் விநாயகரைக் குளிர்வித்தனராம். அறுகம் புல்லை விநாயகரின் முழு உருவத்திலும் சாத்தினார்கள்! விநாயகரின் திருமேனியில் குளிர்மை ஏற்பட்டு அவரது திருமேனியில் ஏற்பட்டிருந்த அந்த வெப்பம் தணிந்ததாம்!
அன்று முதல் விநாயகருக்கு மிகவும் உகந்த பூசைப்பொருளானது அருகம் புல் ! நாமும் விநாயகரை அறுகம் புல்லினால் வழிபாட்டு அவரை சாந்தப்படுத்தி வணங்கி அவர் அருள் பெறுவோம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

Comments by Dr. N. Somash Kurukkal