தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இன்று நம்மவரிடையே தர்ப்பணம் பண்ணுவது குறைந்து கொண்டு வருவதை அவதானிக்கலாம்! தை ஆமாவாசைக்கு தர்ப்பணம், ஆடி ஆமாவாசைக்கு தர்ப்பணம், மஹாளய ஆமாவாசைக்கு தர்ப்பணம் என்று தர்ப்பண எண்ணிக்கை குறைந்து வருகிறது! ஆனால் ஒரு வருஷத்தில் எத்தனை தர்ப்பணங்கள் வருகின்றன என்று தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்!!!
வருடத்தில், தர்ப்பணாதி கடமைகள் 96 உண்டு என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது!!!
• அமாவாசை – 12,
• யுகாதி – 4 : மாக கிருஷ்ண அமாவாசை, பாத்ர கிருஷ்ண த்ரயோதசி, வைசாக சுக்ல த்ருதீயை, கார்த்திக சுக்ல நவமி.
மன்வாதி – 14: சைத்ர சுக்ல த்ருதீயை, சைத்ர பூர்ணிமா, ஜ்யோஷ்ட பூர்ணிமா, ஆஷாட சுக்ல தசமி, ஆஷாட பூர்ணிமா, சிராவண கிருஷ்ண அஷ்டமி, பாத்ர சுக்ல த்ருதீயை, ஆச்வின சுக்ல நவமீ, கார்த்திக சுக்ல த்வாதசி, கார்த்திக பூர்ணிமா, பௌஷ சுக்ல ஏகாதசி, மாக சுக்ல ஸப்தமி, பால்குன பூர்ணிமா, பால்குன அமாவாசை.
சங்கராந்தி – 12,
• வைத்ருதி – 13,
• வ்யதீபாதம் – 13,
• மஹாளயம் – 16,
• அஷ்டகா (அஷ்டமி) – 4: மார்க்க கிருஷ்ண அஷ்டமீ, பௌஷ கிருஷ் ணாஷ்டமி, மாக கிருஷ்ணாஷ்டமி , பாத்ர கிருஷ்ணாஷ்டமி.
அன்வஷ்டகா (அஷ்ட்டம் யந்தர நவமி) – 4: மார்க்க கிருஷ்ண நவமி, பௌஷ கிருஷ்ண நவமி, மாக கிருஷ்ண நவமி, பாத்ர கிருஷ்ண நவமி
• பூர்வேத்யு சிராத்தம் – 4: மாக கிருஷ்ண ஸப்தமி, பௌஷ கிருஷ்ண ஸப்தமி, மார்க்க கிருஷ்ண ஸப்தமி, பாத்ர கிருஷ்ண ஸப்தமி.
ஆக, 12 4 14 12 13 13 16 4 4 4 = 96 (அமா- யுக- மனு-க்ராந்தி -த்ருதி-பாத-மஹாளய -அஷ்டகா- அன்வஷ்டகா- பூர்வேத்யு சிராத்தை: நவதி சஷட்) இப்படி, ஒரு வருடத்தில் 96 தர்ப்பணாதிகள் உண்டு என்கிறது தர்மசாஸ்திரம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

See insights
Boost a post
Like
Comment
Send
Share
Comments by Dr. N. Somash Kurukkal