தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்?
எந்த ஒரு புதுப் பொருளை நாம் அணிந்தாலும், அல்லது திருமண அழைப்பிதழ் , உபநயன அழைப்பிதழ் வேறு எந்த விதமான மங்கலகரமான அழைப்பிதழ்கள் என்றாலும் மஞ்சள், குங்குமம் தொட்டு வைக்கிறோம்! ஏன் ?
அது மங்களகரமாக, நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. மஞ்சள்- குங்குமமும் சந்தனமும் மங்கல திரவியங்கள். அவற்றால், மங்கலங்கள் சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் கிடைக்கும் என்ற எண்ணமே இதற்குக் காரணம்.!!!
நாம் எதன் மூலம் வாழ்கிறோமோ, அதை வணங்குவது நமது வழக்கம். அறுவடை அன்று நெல்லை மகாலட்சுமி என்று பூஜை செய்வோம். அரிசி இருந்ததால் நாம் வாழ்கிறோம். நாம் வாழ்வதால் பகவானை நினைக்கிறோம். எனவே, அரிசியையும் தெய்வாம்சமாகக் கருதுகிறோம்.
அதுவே, புத்தாடை மற்றும் மங்கல அழைப்பிதழ்kal விஷயத் திலும் நிகழ்கிறது. பன்நெடுங்காலமாக பழக்கத்தில் இருக்கும் இந்த வழக்கம் , இந்தக் கலாசாரம், பண்பாடு தொடர்ந்து கடைப்பிடிப்பது, நல்ல மங்கலகரமான விஷயம்தானே!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be a graphic of text