தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சிவ வழிபாடு/ இறை வழிபாடு!!!
அருவமான பரம்பொருளை நாம் உணர்ந்தறிய வேண்டும். அதற்கேற்ப, `பஞ்ச ப்ரம்மம்’ எனும் போற்றுதலுக்குரிய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம் மற்றும் ஸத்யோஜாத முகம் உடையவராக – சதாசிவமூர்த்தியாக லிங்கத் திருமேனியைக் கூறியுள்ளன ஆகமங்கள்.
அவருக்கு வழிபாடு செய்வதால், ஐந்து முகங்களும் திருப்தியடைந்து அதன் மூலம் அவரின் ஆற்றலானது சிருஷ்டி முதலான ஐந்து காரியங்களை நிகழ்த்தி, ஜீவாத்மாக்கள் தங்கள் வினைகளைப் போக்கிக்கொள்வதற்குக் காரணமாக உள்ளது.
பூஜைகள் என்பவை சாதாரணமானவை அல்ல; அணுசக்தியைப் போன்று பெரும் ஆற்றல் உள்ளவை.
சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால், பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை நல்ல ஆற்றல் பெற்று பிரபஞ்சம் முழுவதும் காக்கப்படும். அதனால்தான் ஆலயங்களில் அனுதினமும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஒன்றாக இருக்கக்கூடிய இந்த ஐந்து பூதங்களின் ஆற்றலையும் நாம் தனியாக உணர்ந்து வழிபடுவதன் பொருட்டே, எம்பெருமான் சிவனார் தனித்தனித் தலங்களில் அருள்புரிகிறார்.
நண்பர்களே, நாம் நேரம் ஒதுக்கி ஆலயங்களுக்கு சென்று மனப்பூர்வமாக இந்த வழிபாடுகளை செய்து வந்தால் அதற்கு உண்டான பலன் நிச்சயம் உண்டு!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, நிறுவன இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர் , www.modernhinduculture.com
Comments by Dr. N. Somash Kurukkal