தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மாங்கல்யத்தில் (தாலி) குங்குமம் இட்டு வழிபடும் தாற்பரியம் என்ன? அறிவோம்!!!
நமது சமயத்தில் அனைத்திலும், அனைத்து வழிபாட்டிலும் தெய்வத்தைக் காண்பது மரபு தொன்று தொட்டு வருகிறது! `”’யா தேவீ சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா”’ எனும்படி உலகில் உள்ள அனைத்திலும் சக்தியானவள் பரவியிருந்து, அந்தப் பொருள்களுக்கும், உயிர்களுக்கும் ஆற்றல் தருகிறாள்.
திருமாங்கல்யம் என்பது ஒரு பெண்ணுக்கும் அந்தப் பெண்ணின் கணவனுக்கும் சக்தியை அளிப்பது. அதன் மூலம் அவளும் கணவனும் சிறப்பாக வாழும் சக்தியைப் பெறுகிறார்கள், . இதை `மாங்கல்யம்… மம ஜீவன ஹேதுனா” எனும் ச்லோகம் மூலம் அறியலாம். எனவே, நமக்கு மங்கலத்தை அளிக்கும் திருமாங்கல்யத்தைப் பெண்கள் வழிபடுவது மரபாகி உள்ளது!!!
”‘மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்’”
‘”’மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் ஆரம்பிக்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக என் சுகதுக்கங்களில் பங்கேற்று நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக’” என்று புரோகிதர் சொல்லி அணியும் மாங்கல்யத்தை ஏற்று, அதை புரிந்து கொண்டு , அதில் குங்குமம் இட்டு ,அதில் வீற்றிருக்கும் சக்தியானவளை வணங்கும் மரபு , பாரம்பரியம் தொன்று தொட்டு வழங்கி வருவதைக் காணலாம்.
பெற்றோர்கள் இன்றைய இளம் தம்பதியினருக்கு இவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது எமது பேரவா !!!
இந்த தத்துவ அடிப்படையில்தான் சுமங்கலிப் பெண்கள் பலர் தமது தாலியில் குங்குமம் இட்டு கண்ணில் ஒற்றி வழிபடுவதை பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம்.
முன்னோர்களும் எந்த விடயமாக இருந்தாலும் ஒரு அர்த்தத்துடந்தான் சொல்லி வைத்துள்ளார்கள்! அவற்றைப் பின் பற்றி பெருவாழ்வு வாழ்வோம்!
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர் , www.modernhinduculture.com


Comments by Dr. N. Somash Kurukkal