தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நண்பர்களே, சில இடங்களில் சிலசமயம் ‘ அரோகரா’ என்ற வார்த்தையை கேலியாக பயன்படுத்துவதை அவதானித்து இருப்பீர்கள். யாருக்கும் ஏதும் கஷ்டம் வருகிறது அல்லது வரப் போகிறது என்றால் கேலியாக ” அரோகரா” என்று சிலர் சொல்வதை அவதானித்து உள்ளோம். அதை தவிர்ப்போமே!
ஹரஹரா என்பதன் திரிபுச் சொல்லே அரோகரா. ஹரன் என்பது பரமேஸ்வரனைக் குறிக்கும். ஹரன் என்றால் சிவன். சிவசிவா என்று சொல்கிறோம் அல்லவா, அது போல ஹரன் + ஹரன் = ஹரஹரா என்று இறைவனை துதித்தார்கள். அதுவே காலப்போக்கில் அரோகரா என்றாகி விட்டது. சிவசிவா என்பதுவே அரோகரா என்ற சொல்லின் பொருள். தற்காலத்தில் கோவிந்தா, அரோகரா என்ற வார்த்தைகள் தவறான பொருளில், கேலியாகப் பயன்படுத்தப்படுவது மிகவும் வருந்தத்தக்கது.
நாம் எம்மை திருத்திக் கொண்டால் எல்லாமே தானாக திருந்தி விடும் நண்பர்களே!!!