நண்பர்களே, எந்த விடயம்என்றாலும் ஓர் காரண காரியத்துடன்தான் செய்கிறோம். கடிதம் எழுதுவது என்றால் என்ன, திருமண அழைபிதழ் போன்ற நற்காரிய ஆரம்ப விடயங்கள் என்றால் என்ன ”உ” என்று எழுதி ஆரம்பிப்போம். ஏன் அப்படி ஆரம்பிக்கிறோம்? அறிந்து கொள்வோம்.
எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன்
நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்.
— நன்றி: தகவல்ஆன்மிக இதழ் ஒன்றில் இருந்து,
Panchadcharan Swaminathasarma,
Comments by Dr. N. Somash Kurukkal