தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
திருபள்ளி எழுச்சி ,திருவெம்பாவை மார்கழியில் அதிகாலை நேரம் எழுந்து படிக்கிறோம். ஏன்?
மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் அது. அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் நோய் நீக்கி குடும்பத்தில் செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதிகம்.
அன்று தொடக்கம் நாமும் அதிகாலை எழுந்து இந்த பாராயணங்களை செய்தால் எமக்கு இறைவனின் அருள் கடாட்சம் எமக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அடைந்தோம்.
அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கடவுள் திருநாமங்களைச் சொல்லி பஜனை செய்திடும் பழக்கத்தை ஏற்படுத்தப்பட்டது.
Comments by Dr. N. Somash Kurukkal