அறிந்து கொள்வோம் நண்பர்களே:
சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுவதன் காரணம் என்ன
பஞ்சபூதங்களும் கருங்கல்லில் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மை கருங்கல்லுக்கு உண்டு என்கிறார்கள்.
கல்லுக்குள் நீர் உண்டு. பாறையில் செடிகளும் வளர்வது உண்டு. கற்களை உறசினால் தீப்பற்றிக் கொள்ளும். கல்லுக்குள் காற்றும் உண்டு, அதனால்தான் சில வகையான தவளைகள் கல்லுக்குள் உயிர் வாழ முடியும். ஆகாயத்தை போலவே உலகின் ஒளியையும், ஒலியையும் பெற்றுக்கொள்ளவும், வெளியிடவும் கருங்கல்லால் முடியும். எதிரொலி தோன்றுவதும் கற்களின் மகிமையால்தான்.
இப்படி பஞ்சபூதங்களும் கருங்கல்லில் இருப்பதால்தான், முன்னோர்கள் இதில் சிலை வடித்திருக்கிறார்கள்.
Comments by Dr. N. Somash Kurukkal